தியேட்டரில் குறைந்தது எத்தனை பேர் இருந்தால் படம் திரையிடப்படும்?... ஆளே இல்லாமல் கூட படம் ஓட்டப்படுமா?

First Published | Aug 20, 2024, 8:46 AM IST

திரையரங்குகளில் குறைந்தபட்சம் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டால் படம் திரையிடப்படும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

How Many seats to be Filled in theater to start a movie

மக்கள் பொழுதுபோக்குக்காக அதிகம் ஆர்வம் காட்டுவது சினிமா தான். இன்று ஓடிடியில் ஒரு மாதத்தில் புதுப்படங்கள் வந்துவிட்டாலும், தியேட்டரில் சென்று படம் பார்க்கும் ஃபீல் ஓடிடியில் கிடைக்காது. அதன் காரணமாகவே இன்றளவும் தியேட்டர்களில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆனால் கூட்டம் அலைமோதுகிறது. முன்பெல்லாம் வாரத்துக்கு ஓரிரு படங்கள் ரிலீஸ் ஆகும், ஆனால் தற்போது டஜன் கணக்கில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

Cinema Theatre

முன்பெல்லாம் ஒரு படம் 100 நாள் ஓடினால் தான் அதை ஹிட் என்பார்கள், ஆனால் தற்போது ஒரு படம் ஒருவாரத்திற்கு மேல் தியேட்டர்களில் ஓடினாலே அது பிளாக்பஸ்டர் என சொல்லும் நிலைமை உள்ளது. திரைப்படங்களின் வெற்றியை தீர்மானிப்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் தான். திரையரங்க வசூல் தான் படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது. அப்படி திரையரங்கில் வெற்றியடையும் படங்களைவிட தோல்வியை தழுவும் படங்கள் தான் அதிகம் உள்ளன.

இதையும் படியுங்கள்... நாட்டாமை படத்தில் ரஜினிகாந்த் நடிச்சிருக்காரா? அடடே அதுவும் இந்த ரோலா?

Latest Videos


Movie Theatre

சில சமயங்களில் தியேட்டருக்கு ஆளே வராவிட்டால் கூட படங்கள் திரையிடப்படும், அதே நேரம் 10 பேர் வந்தால் அந்த ஷோவை கேன்சல் செய்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. உண்மையில் எத்தனை பேர் வந்தால் படம் திரையிடப்படும் அதன் பின்னணியில் உள்ள சீக்ரெட் பற்றி பார்க்கலாம். படங்கள் மினிமம் கேரண்டி அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டால் அப்படத்தை ஆள் இல்லாமல் கூட திரையிடுவார்கள்.

unknown facts about theatres

மினிமம் கேரண்டி என்றால் ஒரு படத்திற்கு ஆள் வருகிறார்களோ இல்லையோ, அப்படத்தை 60 ஷோக்கள் ஓட்டினாலே அந்த திரையரங்க உரிமையாளருக்கு 6 லட்ச ரூபாய் வரை கிடைத்துவிடும். அதுவே மினிமம் கேரண்டி இன்றி படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டால், திரையரங்குகள் 10 பேருக்கு குறைவான பார்வையாளர்கள் இருந்தாலே அந்த ஷோவை கேன்சல் செய்துவிடுவார்கள். சமீபத்தில் சந்திரமுகி 2 போன்ற படங்களுக்கு இதுபோன்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... திடீரென பிரேமலதாவை சந்தித்து நன்றி சொன்ன விஜய்; காரணம் இதுதான்!!

click me!