டயானா எப்படி நயன்தாராவாக மாறினார் ? பெயர் மாற்றம் குறித்து லேடி சூப்பர்ஸ்டாரே சொன்ன தகவல்..

Published : Sep 25, 2023, 04:33 PM IST

தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்

PREV
15
டயானா எப்படி நயன்தாராவாக மாறினார் ? பெயர் மாற்றம் குறித்து லேடி சூப்பர்ஸ்டாரே சொன்ன தகவல்..

திரையுலகில் ஹீரோக்கள் அளவுக்கு ஹீரோயின்கள் அதிக காலம் நிலைப்பதில்லை. திருமணம், வயது, அழகு உள்ளிட்ட பல காரணங்களால் நடிகைகள் ஃபீல்டு அவுட் ஆகிவிடுவார்கள்.. அல்லது அக்கா, அம்மா போன்ற துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிடுவார்கள்.

25

ஆனால் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஹீரோனின்களாக நடித்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 20 ஆண்டுகளாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார். 

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யும் நடிகை பூஜா ஹெக்டே? வேகமாக பரவும் தகவல்
 

35

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஹீரோயினை மையப்படுத்தி வெளியான ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

45

ஆனால் நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். இந்த நிலையில் தனது பெயரை மாற்றியது ஏன் என்பது குறித்து நயன்தாரா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் தன்னை மலையாளத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் சத்யம் அந்திகாட் தனது பெயரை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

அல்ட்ரா மாடர்ன் உடையில்.. படுக்கையறை முதல்.. பாத் டப் வரை! கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
 

55

அந்த வீடியோவில் பேசிய அவர் “ எனது முதல் இயக்குனர் என் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறினார். எனக்கு அப்போது எதுவும் தெரியாது சரி என்று கூறினேன். ஆனால் ரொம்ப நாள் அவர் எனக்கும் பெயர் வைக்கவில்லை. படத்திற்கும் பெயர் வைக்கவில்லை. ஒருநாள் நானே அவரிடம் சென்று பெயர் வைக்கிறீங்களா இல்லையா என்று கேட்டேன்.. அதற்கு அவர் 20 - 30 பெயர் லிஸ்ட் போட்டு வைத்துள்ளேன் என்று கூறி ஒரு பெரிய லிஸ்டை கொடுத்தார். அதில் எனக்கு நயன்தாரா என்ற பெயர் எனக்கு பிடித்திருந்தது. அதை அவரிடம் கூறினேன்.. அவரும் இந்த பெயரை வைக்கவே நினைத்திருந்தேன் என்று கூறினார். அப்படி இந்த பெயர் வந்ததௌ” என்று தெரிவித்தார். அன்று முதல் டயானா நயன்தாராவாக அங்கீகரிக்கப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories