தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் விஜய், வருகிற ஜூன் 22-ந் தேதி தனது 49-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலே விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டிவிடும்.
அதன்படி விஜய்யின் பிறந்தநாளன்று லியோ படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட இருக்கிறதாம். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு கமல்ஹாசன் தான் பின்னணி குரல் கொடுத்துள்ளாராம். ஒருவேளை லியோ படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் ஒரு அங்கமாக இருப்பதை அறிவிக்கும் விதமாக இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மறுபுறம், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த அப்டேட்டும் ஜூன் 22-ந் தேதி வர உள்ளதாம். அதன்படி அப்படத்தின் டைட்டிலை அன்றைய தினம் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சிஎஸ்கே என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன. ஆதலால் அதுவே அப்படத்தின் டைட்டிலாக இருக்குமா, அல்லது வேறு ஏதாவது டைட்டிலை சர்ப்ரைஸாக அறிவிப்பார்களா என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... சன்னி லியோனிடம் லீலைகள்?... காம காட்டேரி விஷ்ணுகாந்த்! இறங்கி அடிக்கும் சம்யுக்தா - மீண்டும் வெடித்த மோதல்