வெளிநாட்டில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ள துருவ நட்சத்திரம் டிரைலர்! அதுவும் இந்த தேதியிலா? சூப்பர் அப்டேட் இதோ

First Published | Jun 8, 2023, 9:57 AM IST

கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம். எவ்வளவு கஷ்டமான ரோல் ஆக இருந்தாலும், அதனை அசால்டாக நடித்து அசத்தி வரும் விக்ரம், கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தி இருந்தார். அப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்தது.

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... சன்னி லியோனிடம் லீலைகள்?... காம காட்டேரி விஷ்ணுகாந்த்! இறங்கி அடிக்கும் சம்யுக்தா - மீண்டும் வெடித்த மோதல்


தங்கலான் படத்துக்கு முன்னரே விக்ரம் நடித்த மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதுதான் துருவ நட்சத்திரம். கவுதம் மேனன் இயக்கிய இப்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. இப்படத்தை வருகிற ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை வருகிற ஜூன் 17-ந் தேதி மலேசியாவில் வெளியிட உள்ளார்களாம். மலேசியாவில் அன்றைய தினம் நடைபெற உள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியின் போது துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலரை வெளியிடுவதோடு, அப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் அன்றைய தினம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இயக்குனர் கவுதம் மேனனும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தனது பார்ட்னரை சந்திக்கவே இல்லை – சுப்மன் கில் உடனான காதல், டேட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்த சாரா அலி கான்!

Latest Videos

click me!