ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடிக்கும் குட் பேட் அக்லி படத்துக்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு எவர்கிரீன் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்ய உள்ளாராம்.
நடிகர் அஜித்குமாரின் 63வது படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதற்கு முன்னர் த்ரிஷா இல்லேனா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்துடன் இணையும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. அண்மையில் சக்கைப்போடு போட்ட புஷ்பா 2 படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.
24
குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி
குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்த நிலையில், பின்னர் அவர் விலகியதால் அவருக்கு பதில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார். குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் மூலம் ஒரு புது டிரெண்ட் தமிழ் சினிமாவில் உருவாக உள்ளது. இப்படத்திற்கு ப்ரீமியர் காட்சியும் திரையிடப்பட உள்ளதாம். வருகிற ஏப்ரல் 10ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் ஏப்ரல் 9-ந் தேதியே இப்படத்தின் ப்ரீமியர் காட்சி பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது. அடுத்து வரும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இது ஒரு டிரெண்ட் செட்டராக அமையவும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இருந்து ஒரு தரமான அப்டேட் வந்துள்ளது.
44
குட் பேட் அக்லி படத்தில் ரீமிக்ஸ் பாடல்
அதன்படி குட் பேட் அக்லி படத்திற்காக அஜித்தின் எவர்கிரீன் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்ய உள்ளாரா ஜிவி பிரகாஷ். ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தில் இவர் ‘பஞ்சுமிட்டாய் சேல கட்டி’ பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தது பெரியளவில் ஹிட்டான நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்திற்காக அவரின் தீனா படத்தில் இடம்பெற்ற ‘வத்திக்குச்சு பத்திக்காதுடா’ பாடலை ரீமிக்ஸ் செய்ய உள்ளாராம். தீனா படம் ரிலீஸ் ஆனபோது மாஸ் ஹிட் அடித்த அந்த பாடல் தற்போது மீண்டும் ரீமிக்ஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.