
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கும், கன்டெண்ட் கொடுப்பதிலும் பெயர் போனவர் தான் மிஷ்கின். நடிகர், இயக்குநர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். பிசாசை கூட பேரழகியாக காட்டக் கூடியவர். ஆம், பிசாசு படத்தில் ஹீரோயினை பேயாக காட்டியிருப்பார். இப்போது இந்தப் படத்தின் 2ஆவது பாகம் உருவாகியிருக்கிறது. இதில், ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மிஷ்கின் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் குடிக்கிறவர்கள் தான். நானும் ரொம்பவே குடிப்பவன் என்று கூறிய மிஷ்கின் இளையராஜா பற்றியும் சர்ச்சையான கருத்துக்களை முன் வைத்தார். அதன் பிறகு ஆபாச கருத்துக்களை பேசிய நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் தான் மிஷ்கின் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மனைவியை பிரிந்த நிலையில் கல்யாணம் செய்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய மனைவியை பிரிந்ததற்கு முக்கிய காரணமே சினிமா தான். சினிமா மீதான காதல் என்னால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. இதன் காரணமாக எனக்கும், என்னுடைய மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாமா என்று கூட கேட்டேன். ஆனால், அதற்கு என்னுடைய மனைவி மறுப்பு தெரிவித்துவிட்டு அழுதுவிட்டார். அதன் பிறகு அவர்களை தான் தொந்தரவு செய்யவில்லை. இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என்னுடைய மகளை மனைவியிடமே கொடுத்துவிட்டேன். இப்போது நான் சினிமாவை கல்யாணம் செய்து கொண்டேன். எனக்கு சினிமா போதும். மனைவி தேவையில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சித்திரம் பேசுதடி தான் இயக்குநர் மிஷ்கின் இயக்கிய முதல் படம். அதன் பிறகு அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் த்ரில்லர் கதையில் வந்த படங்கள். இப்போது டிரைன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, நாசர், ஷ்ருதி ஹாசன், கேஎஸ் ரவிக்குமார், நரைன், கலையரசன், யுகி சேது ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார். தற்போது டிரைன் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு இயக்குநரையும் தாண்டி நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். யூத், காதல் வைரஸ், ஜித்தன், நந்தலாலா, சவரக்கத்தி, மாவீரன், லியோ, வணங்கான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் வணங்கான் படத்தில் அவரது நடிப்பில் பலரையும் வியக்க வைத்தது. இப்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டிராகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.