கேப்டனின் ஜெராக்ஸ் காப்பியாக மாறிய ‘பிக் பாஸ்‘ விஜய் சேதுபதி! என்ன செஞ்சிருக்காரு பாருங்க?

Published : Feb 04, 2025, 11:16 AM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி முடிவடைந்ததும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி செய்துள்ள செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

PREV
14
கேப்டனின் ஜெராக்ஸ் காப்பியாக மாறிய ‘பிக் பாஸ்‘ விஜய் சேதுபதி! என்ன செஞ்சிருக்காரு பாருங்க?
பிக் பாஸ் விஜய் சேதுபதி

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதையடுத்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த விஜய் சேதுபதி, தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் அனைவருடனும் எளிமையாக பழகுவதே அவரை அனைவருக்கும் பிடிக்க முக்கிய காரணம்.

24
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தனக்கு பிடித்தவர்கள் மீது விஜய் சேதுபதி காட்டும் அன்பே தனி ரகம் தான். அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்துவார். அவரின் முத்தத்துக்காகவே அவரை சந்திக்கும் ரசிகர்கள் ஏராளம். இப்படி பாசமிகு மனிதராக வலம் வரும் விஜய் சேதுபதி சினிமாவை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த வகையில் முதன்முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர், பின்னர் விஜய் டிவிக்கு தாவினார்.

இதையும் படியுங்கள்... கமலை ஓவர்டேக் செய்த விஜய் சேதுபதி; டிஆர்பி-யில் சாதனை படைத்த பிக் பாஸ் 8 பைனல்

34
பிக் பாஸ் டீமுக்கு விருந்து வைத்த விஜய் சேதுபதி

விஜய் டிவியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கினார். கமல்ஹாசன் 7 சீசன் தொகுத்து வழங்கியதன் மூலம் வாங்கிய பெயரை ஒரே சீசனில் தட்டிச்சென்றுவிட்டார் விஜய் சேதுபதி. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு நடிகர் விஜய் சேதுபதி செய்துள்ள செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி அவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பைனல் நிறைவடைந்ததும் பிரம்மாண்ட விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

44
விஜய் சேதுபதி தான் அடுத்த விஜயகாந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றிய சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு ராஜ விருந்து கொடுத்தாராம் விஜய் சேதுபதி. இந்த தகவலை நடிகை வடிவுக்கரசி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் கேப்டன் விஜயகாந்திடம் என்ன குணாதிசயம் இருந்ததோ அது விஜய் சேதுபதியிடமும் இருப்பதால் தான் அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவரை தன் மகன் போல பார்ப்பதாகவும் நடிகை வடிவுக்கரசி அந்த பேட்டியில் நெகிழ்ச்சி உடன் கூறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  இயக்குனராகும் மணிகண்டன்; முதல் படமே 1000 கோடி வசூல் அள்ளிய நடிகருடனாம்!

Read more Photos on
click me!

Recommended Stories