ஏற்கனவே இந்த படம் குறித்த தகவல் வெளியான நிலையில், தற்போது... இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. இந்த படத்தில் கவுண்டமணியுடன் இணைத்து, தற்போதைய காமெடி ஸ்டார் யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்தகோபால் R.K. சுரேஷ்,மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார், ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.