இந்தியன் 2 படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள கமல்ஹாசன், அப்படத்தில் வேறுமாநில சூப்பர்ஸ்டார் நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர், சினிமாவில் செம்ம பிசியான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
24
அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல். அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பின் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
இப்படத்தை பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். அதனால் இதில் மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மம்முட்டி மற்றும் ஷாருக்கான் ஆகியோரை நடிக்க வைக்க பிளான் போட்டுள்ளாராம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
44
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் இதேபோல் மோகன்லால், ஷிவ ராஜ்குமார், சுனில் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களை நடிக்க வைத்து வருகின்றனர். தற்போதைய நிலவரத்தை பார்த்தால் கமலும் தனது அடுத்த படத்திற்கு ரஜினியின் பார்முலாவை பின்பற்றப் போகிறார் போல தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.