தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான நிலையில்... வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கிற்கு படையெடுத்து வரும் நிலையில், திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டது.
பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், மற்றும் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் போன்றோர் ஒரு படத்தின் வசூல் பற்றி தெரிந்து கொள்வதற்கு சில நாட்கள் ஆகும், அப்படி இருக்கையில் 'வாரிசு' திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் 210 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவலை எப்படி நம்புவது? என தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, வாரிசு பட குழுவினர் வசூல் குறித்து பொய்த்தகவல்களை வெளியிட்டு வருகிறார்களா? என்கிற சந்தேகத்தையும் எழ வைத்துள்ளது.
ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சன் டிவி தொலைக்காட்சியில் 'வாரிசு' திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக சமூக வலைதளத்தில், ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும், 'வாரிசு' படம் வெளியான மூன்றே மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.