தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்துக்காக தேசிய விருது வென்ற இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா, ரகுதாதா போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.