திரையரங்குகளில் புதுப்படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவதை போல் ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் ஏராளமான புதுப் படங்கள் ஸ்ட்ரீம் ஆன வண்ணம் உள்ளன. இந்த வாரம் திரையரங்கில் 8 படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஓடிடியிலும் அதற்கு போட்டியாக அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்த வாரம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லிவ் ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
25
குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ்
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மே 8-ந் தேதியான இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக ரெட் டிராகன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்குமார் நடித்திருந்தார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.
35
அஸ்திரம்
ஷியாம் நாயகனாக நடித்த அஸ்திரம் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இப்படம் வருகிற மே 9ந் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்து உள்ளார்.
இளையராஜா களியப்பெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். இப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. வருகிற மே 9-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
55
மற்ற மொழி படங்கள்
தமன்னா நடிப்பில் உருவான ஒடேலா 2 திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் ராபின்ஹுட் என்கிற தெலுங்கு திரைப்படமும் இந்த வாரம் ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ஜேக் என்கிற தெலுங்கு படமும் மே 9ந் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதேபோல் அம்... ஆ என்கிற மலையாள படமும் இந்த வாரம் சன் நெக்ஸ்டில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.