தமிழகத்தில் பாஜக பெரியளவில் வளர்த்ததற்கு அண்ணாமலையும் ஒரு முக்கிய காரணம். அவர் பாஜக தலைவராக இருந்தபோது தான் அக்கட்சி அசுர வளர்ச்சி கண்டது. அண்மையில் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதியில் நயினார் நாகேந்திரன் தற்போது தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அண்ணாமலை, சினிமாவில் இயக்குனராக இருக்கும் தன்னுடைய கல்லூரி நண்பனை பற்றி பேசினார்.
24
அண்ணாமலையின் நண்பன் தேசிங்கு பெரியசாமி
அந்த நண்பன் வேறுயாருமில்லை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் 50 படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான். கல்லூரியில் இருவரும் ஒன்றாக படித்திருக்கிறார்கள். அப்போது எக்ஸாம் பேப்பர் கொடுத்தால், எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறோம் என அனைவரும் ஆவலோடு பார்ப்பார்களாம். ஆனால் தேசிங்கு பெரியசாமி மட்டும் அதை கண்டுகொள்ள மாட்டாராம். ஏனெனில் அவர் எப்போது கடைசி மதிப்பெண் தான் எடுப்பாராம். தேசிங்குக்கு கல்லூரியில் படிக்கும்போதே சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததாம்.
34
அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்
அந்த ஆர்வத்தால் தான் அவர் சினிமாவில் படம் எடுத்தார் என்று கூறிய அண்ணாமலை, 30 வயதிற்குள் நீங்கள் தோல்வியை சந்தித்தால் அது மிகச்சிறந்த பரிசு என கூறி உள்ளார். அந்த காலகட்டத்திற்குள் கரியரில் தோல்வி அடைந்தவர்களும், ரிலேஷன்ஷிப்பில் தோல்வி அடைந்தவர்களும் அதிர்ஷ்டசாலிகள் என கூறிய அண்ணாமலை, அந்த தோல்வி தான் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுத் தரும் என கூறி இருக்கிறார்.
ஐஐடி மாதிரியான கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை கேள்விப்படும்போது ஏன் இப்படி செய்கிறார்கள் என யோசிப்பேன். 95 சதவீதத்திற்கு பதில் 90 சதவீதம் எடுத்ததால் தற்கொலை செய்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்க்கையில் ஜெயிக்கும் சிலரைப் பார்த்தால் அவர்கள் கடைசி பெஞ்ச் மாணவர்களாக தான் இருப்பார்கள். முதல் பெஞ்ச் மாணவர்கள் கடைசி பெஞ்ச் மாணவர்களின் நிறுவனத்தில் வேலை பார்ப்பார்கள் என அண்ணாமலை கூறி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தேசிங்கு பெரியசாமியும் அண்ணாமலையும் ஒன்றாக படித்தவர்களா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.