'குட் பேட் அக்லி' ரிலீசான 8 மணிநேரத்தில் படக்குழு தலையில் இறங்கிய இடி! அப்செட்டில் அஜித்?

Published : Apr 10, 2025, 05:42 PM ISTUpdated : Apr 10, 2025, 05:46 PM IST

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படம், தமிழகத்தில், இன்று காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆன நிலையில்... 8 மணி நேரத்தில் இணையத்தில் HD தரத்தில் லீக் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
15
'குட் பேட் அக்லி' ரிலீசான  8 மணிநேரத்தில் படக்குழு தலையில் இறங்கிய இடி! அப்செட்டில் அஜித்?

லீக் ஆவது தடுக்கமுடியவில்லை:

சட்ட விரோதமாக திரைப்படங்கள், இணையத்தில் வெளியாகி வருவது... நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்கப் பல்வேறு முயற்சிகளை நடிகர் சங்கம் மற்றும் படக்குழு மேற்கொண்டு வந்தாலும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. முறைகேடாக ஆன்-லைனில் படத்தை லீக் செய்ய கூடாது என படக்குழு நீதிமன்றம் வரை போராடினாலும் புதிய படங்கள் இணையத்தில் லீக் ஆவது தொடர் கதையாகி வருகிறது.
 

25
Most Expected Movie:

அதி வேகமாக லீக்:

குறிப்பாக லோ பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள்... ஓரிரு வாரத்திற்கு பின்னர் இணையத்தில் லீக் செய்யப்பட்டாலும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்க கூடிய, முன்னணி நடிகர்களின் படங்கள் அதி வேகமாக லீக் செய்யப்படுகின்றன. இதனால் பல கோடியை முதலீடு செய்து படம் எடுக்கும் நிறுவனங்கள் வசூல் ரீதியாக பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது.

Good Bad Ugly Cast Salary: ரூ.280 கோடி பட்ஜெட்டில் உருவான 'குட் பேட் அக்லி' பட நடிகர்களின் சம்பள விவரம்!

35
Good Bad Ugly HD Print Leaked:

HD பதிப்பில் பல்வேறு இணைய தளங்களில் லீக்:

அந்த வகையில், இன்று காலை அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம், ரிலீஸ் ஆன 8 மணி நேரத்தில், HD பதிப்பில் பல்வேறு இணைய தளங்களில் லீக் ஆகியுள்ளது. இது படக்குழு தலையில் இடியை இறக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த தகவலால் படக்குழு மட்டும் இன்றி அஜித்தும் கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.  

45
Good Bad Ugly Piracy Issue:

குட் பேட் அக்லி திருட்டுத்தனமாக வெளியானது:

தமிழ் ராக்கர்ஸ், மட்டும் இன்றி, வாட்ஸ் ஆப் குழுக்களிலும் படம் குறித்த லிங்க் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே போல் டெலிகிராம் பக்கத்திலும் படத்தின் லிங்க் ஷேர் செய்யப்பட்டு வருவதால்... அஜித்தின் ரசிகர்கள் பலர், திருட்டு தனமாக வெளியாகும் படத்தை பார்க்க வேண்டாம் என்றும். திரையரங்கில் பார்த்து படக்குழுவுக்கு சப்போர்ட் செய்யுமாறு வழக்கம் போல் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

'குட் பேட் அக்லி' படத்தை மகளுடன் ரோகிணி திரையரங்கில் பார்த்த ஷாலினி! வைரல் வீடியோ!

55
Good Bad Ugly Movie Leaked in Online:

280 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி:

சுமார் ரூ,.280 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, பிரபு, பிரியா வாரியர், சிம்ரன், ஜாக்கி ஷரோப் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories