அல்லு அர்ஜூன் படத்திற்கு அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா? ஜவானை விட 4 மடங்கு அதிகமா?

Published : Apr 10, 2025, 05:07 PM IST

Atlee Salary in Allu Arjun AA22 Movie : சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் அல்லு அர்ஜூனின் 22ஆவது படத்திற்கு இயக்குநர் அட்லீக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

PREV
17
அல்லு அர்ஜூன் படத்திற்கு அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா? ஜவானை விட 4 மடங்கு அதிகமா?
Allu Arjun Next Movie with Atlee

Atlee Salary in Allu Arjun AA22 Movie : தென்னிந்திய சினிமாவில் முக்கியமான இளம் இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் இயக்குநர் அட்லீ. ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு இப்போது தெலுங்கில் கால்பதித்துள்ளார். ராஜா ராணி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான அட்லீ தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்று விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.

27
Atlee - Allu Arjun Movie

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திய அட்லீக்கு ஷாருக்கான் வாய்ப்பு கொடுக்கவே ஜவான் படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்தது. இந்தப் படத்தில் அட்லீக்கு ரூ.30 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

37
Atlee Salary in AA22 Movie, Atlee Salary in Allu Arjun Movie

இந்த நிலையில் தான் ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லீ தனது 6ஆவது படமான நடிகர் அல்லு அர்ஜூனின் 22ஆவது படத்தை இயக்குகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

47
AA22 and A6 Movie, Tamil Cinema, Cinema Gallery

அல்லு அர்ஜூன் ரசிகர்கள் குஷியாகும் வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில், அற்புதமான கான்செப்ட்டுடன் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட், நட்சத்திரங்களின் சம்பளம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.800 கோடி என்று பிங்க்வில்லா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

57
Sun Pictures, AA22 and A6 Movie

அல்லு அர்ஜூன், அட்லீ சம்பளம் எவ்வளவு?

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் (VFX)க்காக மட்டுமே 250 கோடி சன் பிக்சர்ஸ் செலவு செய்கிறதாம். மேலும் பான் இந்தியா ஹீரோ, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனுக்கு இந்த படத்திற்காக சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தவிர படத்தின் லாபத்தில் இருந்து 15 சதவீதம் அல்லு அர்ஜூனுக்கு கிடைக்கும். இயக்குனர் அட்லீயின் கேரியரில் இது 6வது படம். இந்த படத்திற்காக அவருக்கு ரூ.100 கோடி கொடுக்கப்படுவதாக தகவல். இதற்கு முன்னதாக ஜவான் படத்திற்கு அட்லீக்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருகிறது.

67
Atlee Salary in Allu Arjun Movie

ஆனால் இந்தப் படத்திற்கு அதைவிட 3 மடங்கு இல்லை 4 மடங்கு அதிமாக அல்லு அர்ஜூன் படத்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை உலக அளவில் கவரும் வகையில் ஒரு பான் வேர்ல்ட் திரைப்படமாக உருவாக்க அட்லீ திட்டமிட்டுள்ளார். ஹாலிவுட்டில் உள்ள டாப் ஸ்டூடியோக்களில் இந்த படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் (VFX) பணிகள் நடைபெற்று வருகின்றன.

77
Allu Arjun, Atlee, Atlee Salary in AA22 Movie

பட்ஜெட் பார்த்தால் ராஜமௌலியின் புதிய படத்தை விட ஏஏ22 எக்ஸ் ஏ6 (அல்லு அர்ஜுனின் 22வது படம் மற்றும் அட்லீயின் 6வது படம்) படத்தின் பட்ஜெட் குறைவு. மகேஷ் பாபுவுடன் ராஜமௌலி எடுக்கும் படத்தின் பட்ஜெட் 1000 கோடி என்று தகவல். இந்த படங்களால் தென்னிந்திய சினிமா எந்த அளவிற்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories