அரசி படிப்பு சம்மந்தமாக சதீஷிடம் பேச வரச்சொல்லும் மீனா:
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' 2 சீரியலில் இன்றைய 450ஆவது எபிசோடானது அரசிக்காக மீனா எடுக்கும் ரிஸ்க் பற்றிய காட்சிகளை வெளிப்படுத்துகிறது. அரசியின் படிப்பிற்காக மீனா அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை சதீஷ் உடன் பேச அவரை கருமாரி அம்மன் கோயிலுக்கு வர சொல்லியிருந்தார். அப்போது என்ன நடக்க உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
25
Thangamayil Decision Changed:
கோயிலுக்கு செல்கிறோம்:
மாப்பிள்ளையிடம் பேச ரொம்பவே ஆர்வமாக மீனா, ராஜீ மற்றும் மயில் ஆகியோர் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்து மயில் எனக்கு லீவு தரமாட்டாங்க. நான் வரவில்லை என்று கூறி ஜகா வாங்கிவிட்டார். அந்த நேரம் பார்த்து கோமதி அங்கு வர, நீங்கள் மூன்று பேரும் சேர்த்து ஏதோ பிளான் போடுறீங்க என்று சொல்ல, இல்ல இல்ல நாங்கள் கோயிலுக்கு செல்கிறோம் என்று மீனா சொல்ல, ராஜீயோ கருமாரி அம்மன் கோயிலுக்கு போறோம் என சொல்கிறார்.
நானும் அங்கு தான் செல்ல நினைத்திருந்தேன். சரி, வாங்க போலாம் என்று பூஜை பொருட்களை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு புறப்படுகிறார் கோமதி. சரி, சதீஷை வர வேண்டாம் என்று சொல்ல அவருக்கு போன் செய்தால் அவரோ போன் எடுக்கவில்லை. பின்னர், வேறு வழியின்றி மூவரும் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஒருவழியாக கோமதி நினைத்த மாதிரி சாமி தரிசனம் செய்துவிட்டார்.
45
Sathish Came with mother
அம்மாவுடன் வந்திறங்கும் சதீஷ்
ஆனால், ராஜீயும், மீனாவும் தான் கொஞ்சம் பதற்றமாகவே இருக்கிறது. அப்போது சதீஷ் தான் வந்துவிட்டதாக சொல்லி மீனாவிற்கு போன் போட்டு சொல்லியிருக்கிறார். அவரை கூப்பிட வந்த மீனா அவரின் அம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மீனா தன்னிடம் தனியாக பேச அழைப்பதாக சதீஷ் தனது அம்மாவிடம் சொல்லி அவரையும் கோயிலுக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அவரை சமாளித்து கோயிலுக்குள் வரவிடாமல் தடுக்க தன்னால் எவ்வளவு முடியோ அவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. மீனாவை வெளியில்விட்டுவிட்டு சதீஷூம் அவரது அம்மாவும் கோயிலுக்குள் சென்றுள்ளனர்.
உடனே கோயிலுக்குள் ஓடிய மீனா அவர்களை தடுத்து நிறுத்தி கொஞ்சம் பொறுமையாக ஆர அமர்ந்து பேசலாம் என்று சொல்கிறார். ஆனால், முதலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவோம் என்று கூறி உள்ளே சுற்ற, கோமதியும், ராஜீயும் கோயிலில் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தனர். பின்னர் அவர்களும் கோயிலை சுற்ற, மீனா, சதீஷூம் அவரது அம்மாவும் சுற்றவே யாரும் ஒருவருக்கொருவர் பார்க்கவில்லை. அதோடு இன்றைய 450ஆவது எபிசோடு முடிவடைகிறது.
இனி நாளைய எபிசோடில் இவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டால் என்ன நடக்கும்? மீனா தான் தங்களை இங்கு வரச்சொன்னதாக மாப்பிள்ளை சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.