Published : Apr 10, 2025, 04:25 PM ISTUpdated : Apr 10, 2025, 04:32 PM IST
அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ள, 'குட் பேட் அக்லி' படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படம், ரூ.280 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஆந்திராவை சேர்ந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ரூ.1800 கோடி வசூல் செய்த, 'புஷ்பா 2' படத்தையும் தயாரித்திருந்தது இந்த நிறுவனம் தான்.
26
Ajith Salary in Good Bad Ugly:
ரூ.165 கோடி அஜித் சம்பளமாக பெற்றுள்ளார்:
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான 'விடாமுயற்சி' படம் தோல்வியை தழுவிய போதிலும், 'குட் பேட் அக்லி' படத்திற்கு, அந்த படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட அஜித் ரூ.60 கோடி அதிகமாக பெற்றுள்ளார். அதாவது, விடாமுயற்சி படத்திற்கு ரூ.105 கோடி மட்டுமே அஜித் சம்பளமாக வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால், 'குட் பேட் அக்லி' படத்திற்கு ரூ.165 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார்.
இவரை தொடர்ந்து இந்த படத்திற்கு அதிக சம்பளம் வாங்கியவர் என்றால் அது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். இவர் இந்த படத்தை இயக்க ரூ.12 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அதே போல் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள த்ரிஷாவுக்கு ரூ.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ரூ.5 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார்.
46
Yogi Babu and Priya Prakash Warrier Salary:
யோகி பாபு சம்பளம்
'குட் பேட் அக்லி' படத்தில், கோடிகளில் சம்பளம் பெற்றவர்கள் இவர்கள் மட்டுமே. இவர்களுக்கு அடுத்தபடியாக நடித்த நடிகர்கள் அனைவருக்குமே லட்சங்களில் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி யார் யாருக்கு எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்வோம்.
இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு ரூ.15 லட்சம் சம்பளமாக வழங்கியுள்ளனர். அதே போல் காமெடியில் கலக்கியுள்ள நடிகர் யோகி பாபுவுக்கு, 70 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இவரைத் தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கு 35 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
அர்ஜுன் தாசுக்கு 80 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர்:
'குட் பேட் அக்லி' படத்தில், ஸ்டைலிஷ் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாசுக்கு 80 லட்சம் வரை சம்பளமாக வழங்கியுள்ளதாகவும், நடிகர் பிரசன்னாவுக்கு ரூ. 50 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்புக்கு ரூ.50 லட்சமும், தெலுங்கு நடிகர் சுனிலுக்கு ரூ.40 லட்சம் லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளதாம். நடிகர் பிரபுவுக்கு ரூ.30 லட்சம் வரை சம்பளமாக கொடுத்துள்ளனர்.
66
Good Bad Ugly Cast Salary:
அஜித்தின் காட்சிகள் மட்டுமே பிரதானமாக இருக்கும்
இந்த படத்தில் 4 பேரை தவிர மற்றவர்களுக்கு லட்சங்களில் மட்டுமே சம்பளம் கொடுக்க காரணம்... அஜித்தின் காட்சிகள் மட்டுமே இந்த படத்தில் பிரதானமாக இருக்கும் என்றும் மற்றவர்களின் காட்சிகள் அதிகம் இடம்பெறாது என கூறப்படுகிறது. மனைவிக்காகவும்... குழந்தைகளுக்காகவும் நல்லவனாக திருந்தி வாழும் அஜித், தன்னுடைய மகனுக்காக மீண்டும் கேங் ஸ்டாராக மாறுவதே இந்த படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.