ப்ளூ சட்டை மாறனை இறங்கி ஏதாவது செய்யணும்ணு தோணுது- கோபத்தில் கொந்தளித்த கவுதம் மேனன்

Published : Sep 20, 2022, 02:55 PM IST

ப்ளூ சட்டை மாறன், அவரது யூட்யூப் சேனலுக்கு ஸ்பான்சர் கிடைக்குறதுக்கும், அவருக்கு பணம் வர்றதுக்காகவும், ஒரு படத்தை தரக்குறைவா விமர்சனம் செய்றத பார்க்கும்போது எனக்கு ரொம்ப கோபம் வரும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

PREV
14
ப்ளூ சட்டை மாறனை இறங்கி ஏதாவது செய்யணும்ணு தோணுது- கோபத்தில் கொந்தளித்த கவுதம் மேனன்

சிம்பு - கவுதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் வெந்து தணிந்தது காடு. கடந்த வாரம் ரிலீசான இப்படம் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 5 நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இப்படத்தை சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்த விதம் படக்குழுவினரை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

24

பிரபல தனியார் சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் கவுதம் மேனனிடம் வெந்து தணிந்தது காடு படத்தின் விமர்சனங்களை பற்றி கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கவுதம் மேனன், “பொதுவாக நான் விமர்சனங்களை படிப்பது இல்லை. ஆனால் ஒரு சில விமர்சனங்களைப் பார்க்கும் போது, இதைப்படித்து மக்கள் படம் பார்க்க வருவதில்லையோ என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. எனது படங்களுக்கு எப்போதும் நெகட்டிவ் விமர்சனங்களே அதிகளவில் வரும். 

34

ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தை பொறுத்தவரையில் 80 சதவீதத்துக்கும் மேல் பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வந்துள்ளன. விமர்சகர்களை நான் விமர்சனம் செய்ய வேண்டாம்னு சொல்லல, அதை மரியாதையா செய்யலாமே. நீங்கள் எதிர்பார்த்ததை ஏன் விமர்சனமா சொல்றீங்க. நாங்க என்ன பண்ணிருக்கமோ, அத மட்டும் விமர்சனமா சொல்லுங்க. இந்தப் படம் இப்படி இருந்திருந்தா நல்லாருக்கும்ன்னு சொல்றதெல்லாம் மிகவும் முட்டாள்தனமான விஷயம். 

இதையும் படியுங்கள்... சிம்பு செய்த உருவகேலிகளை டுவிட்டரில் லிஸ்ட் போட்டு... விடாது கருப்பாய் துரத்தும் ப்ளூ சட்டை மாறன்

44

ப்ளூ சட்டை மாறன் மேல எனக்கு அவ்வளவு கடுப்பு. அவரது யூட்யூப் சேனலுக்கு ஸ்பான்சர் கிடைக்குறதுக்கும், அவருக்கு பணம் வர்றதுக்காகவும், ஒரு படத்தை தரக்குறைவா விமர்சனம் செய்றத பார்க்கும்போது எனக்கும் ரொம்ப கோபம் வரும். நீ ரிவ்யூ பண்ணு, ஆனா இளக்காரமாவோ, தரக்குறைவாகவோ விமர்சனம் பண்ணாத. 

அவர் சொன்ன திருச்சிற்றம்பலம் படத்தோட விமர்சனத்தை பார்த்தபோது, அதில் முதல் 10 நிமிஷம் படத்தை பற்றி கழுவி ஊற்றி விட்டு, நடுவுல படம் நல்லா இருக்குன்னு சொல்லுவாரு. இதெல்லாம் பார்க்குறப்போ, இறங்கி ஏதாவது செய்யலாமாங்குற அளவுக்கு கோபம் வருது. மத்தவங்களுக்கு அப்படி கோபம் வருதான்னு எனக்கு தெரியல. ஆனா உண்மையிலேயே எனக்கு இறங்கி ஏதாவது செய்யலாமான்னு தோணுது” என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... வீணா போனவன் டான் ஆன கதைனு விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்... சக்சஸ் மீட்டில் தரமான பதிலடி கொடுத்த சிம்பு

Read more Photos on
click me!

Recommended Stories