Published : Sep 20, 2022, 02:27 PM ISTUpdated : Sep 20, 2022, 02:28 PM IST
நடிகை த்ரிஷா 40 வயதை நெருங்கிய போதும், இன்னும் 20 வயது நாயகி போலவே ஜொலிக்கிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் த்ரிஷா நடித்திருந்தாலு, த்ரிஷா அதிக கவனம் செலுத்தியது தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் தான்.
26
இந்த இரண்டு மொழிகளில் மட்டும், கிட்ட தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். அதிலும் தமிழில், ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், விக்ரம், சூர்யா என டாப் லிஸ்டில் இடம்பிடித்துள்ள அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
தற்போது 40 வயதை நெருங்கியுள்ள இவருக்கு ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். ஆனால் துரதிஷ்ட வசமாக இவர் நடித்த அப்படி பட்ட படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.
46
இதை தொடர்ந்து, இவருக்கு மீண்டும் கம் பேக் படமாக அமைந்தது 96. இதன் பின்னர் ரஜினிக்கு ஜோடியாக பேட்ட மற்றும் பரமபத விளையாட்டு ஆகிய படங்களில் நடித்தார்.
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷாவும் கலந்துகொண்டு பேட்டி கொடுத்து வருகிறார்.
66
இதுபோன்ற புரொமோஷன் பணிகளில்... ரசிகர்களை மெஸ்மரெயிஸ் செய்யும் அழகில், விதவிதமான உடைகளில் ஜொலிக்கிறார். தற்போது இதுகுறித்த புகைபடங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.