மேடை நாடங்களில் நடித்து, பின்னர் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கவுண்டமணி. ஆரம்ப காலத்தில் பல்வேறு கஷ்டங்களைக் கடந்து தான் திரையுலகில் இவரால் நிலையான இடத்தை பிடிக்க முடிந்தது. இவரை ரசிகர்கள் காமெடி கிங் என அழைத்தாலும், காமெடியை தாண்டி குணச்சித்திரம், வில்லன், ஹீரோ, என பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவர்.