சீரியலில் நாயகி ரக்ஷிதா:
பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா மஹாலக்ஷ்மி கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமான பின்னரே தமிழ் சீரியல்களில் வாய்ப்பை கைப்பற்றினார்.
பத்தி கொண்ட காதல்:
இந்த சீரியலில் நடித்த போது, அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் கோபாலகிருஷ்ணனுக்கும் இவருக்கும் காதல் பற்றிக்கொண்டதோடு திருமணத்திலும் முடிந்தது.
திரைப்பட வாய்ப்பு:
சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து வியர்ந்த மொழி பட இயக்குனர் ராதா மோகன் 'உப்புக்கருவாடு' படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தை வழங்கினார்.
மணமுறிவு:
சமீப காலமாகவே கணவர் தினேஷுடனான கருத்து வேறுபாடு காரணமாக, ரக்ஷிதா பிரிந்தே வாழ்ந்து வருகிறார். தினேஷ் இவருடன் இணைந்து வாழ ஆசைப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ரக்ஷிதா இல்லை.
புது கார்:
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரக்ஷிதா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.