சூர்யா முதல் தனுஷ் வரை.. படங்களுக்காக 6 பேக் வைத்து படு ஸ்டைலாக மாறிய தமிழ் நடிகர்கள் லிஸ்ட் இதோ..

First Published | Sep 30, 2023, 4:30 PM IST

படங்களுக்காக 6 பேக் வைத்து ஃபிட்டாக மாறிய நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

ஒரு படத்திற்காக நடிகர்கள் ஹேர் ஸ்டைல், தோற்றத்தை மாற்றுவது பொதுவான ஒன்றுதான். மேலும் படங்களுக்காக உடல் எடையை குறைப்பது அல்லது எடை அதிகரிப்பது. முடி வளர்ப்பது, தாடி வளர்ப்பது என பல செயல்களை நடிகர்கள் செய்கின்றனர். அந்த வகையில் படங்களுக்காக 6 பேக் வைத்து ஃபிட்டாக மாறிய நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

சூர்யா : 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்காக, சூர்யா 6 பேக் வைத்து படு ஃபிட்டாக மாறினார். இந்த படத்தில் இருந்து தான் 6 பேக் என்ற கான்செப்ட் ட்ரெண்ட் செட்டராக மாறியது. கௌதம் மேனன் இயக்கிய இப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

Tap to resize

விஷால் : 2008 ஆம் ஆண்டு வெளியான சத்யம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் 6 பேக் வைத்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தப்பித்தது.

ஒரு படத்திற்கு 12 கோடி சம்பளம்.. இவங்க தான் இப்போ தென்னிந்தியாவின் No.1 நடிகை.. அப்ப நயன்தாரா.?
 

பரத் : ஐந்து ஐந்து ஐந்து படத்துக்காக நடிகர் பரத் 6 பேக் வைத்து அனைவரையும் ஈர்த்தார். இப்படத்தில் அவர் நடித்திருந்த அரவிந்தன் கேரக்டருகு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் கலவையான விமர்சனைங்களை பெற்றது.

.

அதர்வா : ஈட்டி படத்தில் நடிப்பதற்காக நடிகர் அதர்வாக 6 பேக் கொண்ட உடலமைப்புக்கு மாறினார். பல மாத உழைப்புக்குப் பிறகு, ஃபிட்டான தோற்றத்திற்கு மாறினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் லாபகரமான படமாகவே பார்க்கப்படுகிறது.

 

அருண் விஜய் : சில நல்ல படங்களில் நடித்திருந்தாலும், அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அருண் விஜய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். எப்போதுமே ஃபிட்டாக இருக்கும் அருண் விஜய் இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து 6 பேக் வைத்தார்.

தனுஷ் : 2007 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படமான பொல்லாதவன் படத்தில் தனுஷின் சிக்ஸ் பேக் தோற்றம் வெகுவாக கவனம் ஈர்த்தது. தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படம் தனுஷின் கேரியரில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அஜித் : விவேகம் படத்திற்காக ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் 6 பேக் வைத்து படு ஸ்டைலாக மாறினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனினும் அஜித்தின் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசைக்கு பாராட்டு கிடைத்தது.

விக்ரம் : படங்களுக்காக உடல் அமைப்பை மாற்றுவதில் பெயர் பெற்ற விக்ரம், ஐ படத்திற்காக 6 பேக் தோற்றத்திற்குமாறினார். இப்படத்தின் டீசர் ஆர்வத்தை அதிகரித்தாலும், படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. இருப்பினும், இது வணிக ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

ரஜினி இல்ல.. சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்ட விஜயகாந்த்.! எப்போது, ஏன்..? சுவாரஸ்ய தகவல்..
 

ஆர்யா : பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்திற்காக ஆர்யா 6 பேக் வைத்து அனைவரையும் ஈர்த்தார். இந்த தியேட்டரில் வெளியாகவில்லை என்றாலும், திரைக்கதை, இயக்கம், ஆக்‌ஷன் காட்சிகள், இசை, ஒளிப்பதிவு மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்புக்காக இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

sandy master

சாண்டி மாஸ்டர் : பிரபல கோரியோகிராபர் சாண்டி, தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 6 பேக் வைத்து படு ஸ்டைலாக இருக்கிறார். டான்ஸ் மாஸ்டரா அல்லது ஜிம் மாஸ்டரா என்ற சந்தேகம் ஏற்படும் மாறி இருக்கிறார் சாண்டி

Latest Videos

click me!