"கடவுள் என்னிடம் இதை சொன்னார்” மனைவி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் போட்ட உருக்கமான பதிவு..

Published : Sep 30, 2023, 10:52 AM ISTUpdated : Sep 30, 2023, 11:22 AM IST

தற்போது, விக்கி - நயன் ஜோடி தங்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை தொடங்கி உள்ளனர்.      

PREV
16
"கடவுள் என்னிடம் இதை சொன்னார்”  மனைவி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் போட்ட உருக்கமான பதிவு..
Lady Super Nayanthara

தமிழ் திரையுலகில் அதிகம் விரும்பப்படும் நட்சத்திர ஜோடிகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியும் ஒன்று. நயன் தனது கணவருடன் இணைந்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது, விக்கி - நயன் ஜோடி தங்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை தொடங்கி உள்ளனர்.

26

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான நிகழ்வில் 9 ஸ்கின் என்ற புதிய ஸ்கின்கேர் தயாரிப்பை அறிமுகம் செய்தார். இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். 

36

மேலும் அவரின் பதிவில் ‘"எங்களிடம் ஒரு மூலோபாயத் திட்டம் உள்ளது. அது எங்களை பல விஷயங்களை செய்ய சொல்லி அழைக்கிறது. எனது பரபரப்பான பார்ட்னர், எனது வாழ்க்கை துணை மற்றும் எனது பிசினஸ் பார்டனருக்கு மிகப்பெரிய அன்பு.. லவ் யூ மை தங்கம்," பதிவிட்டுள்ளார். நமக்கு கிடைத்த எல்லா ஆசீர்வாதங்களும் நமக்கு தொடரும் என்று கடவுள் என்னிடம் சொன்னார், எனவே அந்த நம்பிக்கையுடன், நம் கனவுகள் அனைத்தையும் அடைய கடினமாக உழைத்துக்கொண்டே இருப்போம் !! ஒரு புதிய உலகில் அடியெடுத்து வைக்கிறோம்.. ஆனால் இது ஏற்கனவே நன்றாக இருக்கிறது!"  என்று விக்னேஷ் சிவன் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். 

46

நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் தான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. இந்த ஜோடி கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர். எனினும் இந்த ஜோடி 2016-ம் ஆண்டில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

56
nayanthara

பின்னர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இல், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றதாக அறிவித்தனர். தம்பதியினர் தங்கள் மகன்களுக்கு உயிர் மற்றும் உலக என்று தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெயரிட்டனர்.

66
Actor Nayantharas instagram post about her husband Vignesh Shivan on birthday

செப்டம்பர் 26-ம் தேதி இந்த இரட்டை குழந்தைகள் தங்கள் முதல் பிறந்தநாளைக் கொண்டாடினர். இதுதொடர்பான புகைப்படங்கள் இருவரும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories