திரையுலகில் ஹீரோக்கள் அளவுக்கு ஹீரோயின்கள் அதிக காலம் நிலைப்பதில்லை. திருமணம், வயது, அழகு உள்ளிட்ட பல காரணங்களால் நடிகைகள் ஃபீல்டு அவுட் ஆகிவிடுவார்கள்.. அல்லது அக்கா, அம்மா போன்ற துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஹீரோனின்களாக நடித்து வருகின்றனர். த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். துணை கேரக்டரில் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர் என்பது தான் சிறப்பு.
இதனால் சமீப காலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் கணிசமான சம்பளம் வாங்குகின்றனர். ஆரம்பத்தில், நயன்தாரா ரூ.10 முதல் 11 கோடி வரை ஒன்பது எண்ணிக்கை சம்பளம் பெற்ற முதல் தென்னக நடிகையாக கொண்டாடப்பட்டார். ஆனால் தற்போது நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஒருவர் உள்ளார். ஆம். தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பட்டத்தை த்ரிஷா பெற்றுள்ளார்.
த்ரிஷாவின் நடிப்பு, இளமை மாறாத வசீகரமான அழகு ஆகியவை நயன்தாராவின் சம்பளத்தை மிஞ்சும் வகையில் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக அவருக்கு ரூ. 12 கோடி என்ற பெரும் தொகையை சம்பளமாக தர தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளதாகவும், இறுதிப் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம், நயன்தாராவின் சம்பளத்தில் பெரிதாக குறையவில்லை. பாலிவுட்டில் 'ஜவான்' படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அந்த படத்திற்காக அவர் 11 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
மற்ற தென்னிந்திய நடிகைகளை பொறுத்த வரை, அனுஷ்கா ஷெட்டி 6 கோடி சம்பளம் வாங்குகிறாராம். தமிழில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
Samantha ,Anushka-Shetty
நடிகை சமந்தா ரூ 3 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. அவர் நடித்த யசோதா, சாகுந்தலம் குஷி படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் சமந்தா நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே ஒரு படத்திற்கு ரூ 2.5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு படங்களில் பிசியான பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
Rashmika Mandanna
ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு ரூ 2 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தமன்னா ஒரு படத்திற்கு ரூ. 1.5 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. காவாளா பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ட்ரெண்டான தமன்னா தற்போது தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு ரூ 1.5 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இந்தியன் 2 உட்பட. ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு படத்திற்கு ரூ 1.5 முதல் 3.5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் பிசியாக இருந்த அவர் இந்தியன் 2 அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
keerthy suresh
கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு ரூ 1 முதல் 3 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.