சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும், கொஞ்சம் கூட குறையல என்கிற வசனத்திற்கு ஏற்ப, இன்றும்... என்றும்... துள்ளலான எனர்ஜிடிக் நடிப்பை வெளிப்படுத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகை பழக்கத்திற்கு அடிமையானவர். ஆரம்ப காலத்தில் அதிக அளவில் புகைபிடித்துள்ளதாக அவரே தன்னுடைய பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆனால் இந்த புகை மற்றும் மது பழக்கத்தால் தன்னுடைய உடல்நலன் பாதிக்கப்படவே, தன்னுடைய குடும்பத்தினருக்கான அந்த பழக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வந்தார்.
மகேஷ் பாபு:
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு... கதாநாயகனாக நடிக்க துவங்கிய காலத்தில் இருந்து சில வருடங்கள் செயின் ஸ்மோக்கராக இருந்தார். பின்னர் 'How to Stop Smoking' என்கிற புத்தகத்தை படித்த பின்னர், புகைப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்தார்.
ராணா டகுபதி:
தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான ராணா... தீவிர உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். அவரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னரே நலமடைந்தார். இந்த பாதிப்புக்கு பின்னர் மருத்துவர்களின், அறிவுரையால் புகைப்பழக்கத்தை கைவிட்டார்.
விஜய் தேவரைக்கொண்டா:
நடிகர் விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்கும் போது... அந்த கதாபாத்திரத்திற்காக புகைபிடிக்க துவங்கிய நிலையில், பின்னர் செயின் ஸ்மோக்கராக மாறியுள்ளார். பின்னர், படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் மெல்ல மெல்ல... அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.
வெற்றிமாறன்:
தேசிய விருது இயக்குனரான வெற்றிமாறன், தீவிர செயின் ஸ்மோக்கர். ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட சிகரெட்டை கூட அசால்ட்டாக ஊதி தள்ளியதாக இவரே தன்னுடைய பேட்டிகளில் கூறியுள்ள நிலையில், தன்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்தும் குடும்பத்தினருக்காகவும், மெல்ல மெல்ல, அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்ததாக தெரிவித்துள்ளார்.