Dangal
ஒரு ஆண்டில் பல திரைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைக்கும் படங்கள் வெகு சில தான். அந்த வகையில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்திய படங்களை இயக்கிய 5 இயக்குனர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதிக வசூல் செய்த படங்களில் தங்கல் படம் முதலிடத்தில் உள்ளது. நிதிஷ் திவாரி இயக்கிய தங்கல் படம் உலகளவில் 2070 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. ஆமீர்கான், பாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி, RRR ஆகிய படங்கள் 1000 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இதில் பாகுபலி 2 படம் ரூ. 1788 கோடி வசூல் செய்துள்ளது. பாகுபலி 2 படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
RRR
இதே போல் RRR ரூ.1230 கோடி வசூல் செய்தது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர்.
Pathan OTT
சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படம் உலகளவில் ரூ.1055 கோடி வசூல் செய்தது. ஷாருக்கானின் கம்பேக் படமாக கருதப்பட்ட இந்த படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜவான் படம் ரூ.1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.