தமிழ் சினிமாவில் 80-பது மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. சென்னையை சேர்ந்த இவர் ஆர்த்தி தேவி என்கிற தன்னுடைய இயற்பெயரை, சினிமாவுக்காக சுகன்யா என மாற்றிக்கொண்டார். பரதநாட்டிய கலைஞர் ஆன இவரை, இயக்குனர் பாரதிராஜா தான், நடிகையாக தான் இயக்கிய, புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக்கினார்.
முதல் படத்திலேயே, திறமையான நடிப்பை வெளிப்படுத்தியது மட்டும் இன்றி, தன்னுடைய கவர்ந்திழுக்கும் அழகால், தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர் சுகன்யா. அடுத்தடுத்து எம் ஜி ஆர் நகரில், சின்ன கவுண்டர், கோட்டைவாசல், திருமதி பழனிச்சாமி, தம்பி பொண்டாட்டி, இந்தியன், கேப்டன் என பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கேரக்டர் பற்றி நான் கூறியது இது தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்கியராஜ், கார்த்தி, சரத்குமார், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சுகன்யா. நடிகை என்பதைத் தாண்டி, பாரத நாட்டிய கலைஞர், மியூசிக் காம்போசர், சிங்கர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர் சுகன்யா.
divorce
இவர் விவாகரத்து பெற்று பல வருடங்கள் ஆகும் நிலையில், நடிகை சுகன்யா முதல் முறையாக விவாகரத்து குறித்து பேசி உள்ள தகவல் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது "பெண்கள் பயந்து ஓட தேவையில்லை, கணவன் - மனைவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து செய்யலாம். அல்லது முறையாக வாழ விருப்பமில்லை என்பதை தெரிவித்து, நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறலாம். ஒருவேளை நீங்கள் விவாகரத்து பெற தயக்கம் காட்டினால் கடுமையான காலங்களை, குடும்ப வாழ்க்கையில் சந்திக்க நேரும். பிடிக்காத திருமணத்தில் இருந்து வாழ்வதைவிட விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம். அதெல்லாம் கடந்து தான் பெண் வரவேண்டி இருக்கிறாள். என பேசியுள்ளார்.