தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த பிரபலமான நடிகர் சர்வானந்த். இவருக்கும் ஐடி துறையில் வேலை செய்து வரும், இவரின் காதலி ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் மிகப்பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
சர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பிறகும், திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சர்வானந்த் மற்றும் அவருடைய காதலி ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நின்று விட்டதாக சில வதந்திகள் பரவுது தொடங்கியது. இதற்க்கு சர்வானந்த் தரப்பில் இருந்து அவருடைய நண்பர் ஒருவர், தற்போது சர்வானந்த், ஸ்ரீராம் ஆதித்யாவுடன் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டலின் இருந்த அவர் தற்போது தான் வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தற்போது சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் ஜூன் மூன்றாம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய திருமணம், அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமடைந்து வருகிறது. விரைவில் இவர்களுடைய திருமண பத்திரிக்கையும் வெளியாகும் என கூறப்படுகிறது. திருமண நிச்சயதார்த்தமே மிகப் பிரமாண்டமாக நடந்த நிலையில், அதை விட பல மடங்கு பிரமாண்டமாக திருமணத்தை நடத்த சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.