ஷங்கர் இப்படி ஏமாத்திட்டாரே! கேம் சேஞ்சர் படம் பார்த்து புலம்பும் ரசிகர்கள்

First Published | Jan 10, 2025, 8:24 AM IST

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கும் கேம் சேஞ்சர் படம் பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

Kiara Advani, Ram Charan

தெலுங்கில் மாஸ் நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலை முதலே இப்படத்திற்கான பிரீமியர் ஷோக்கள் தொடங்கின. முதற்கட்ட தகவல்படி இது ஷங்கர் ரேஞ்ச் படம் இல்லை, ஆனாலும் ஒரு முறை பார்க்கலாம் என விமர்சனங்கள் வந்த வண்ணாம் உள்ளன. குறிப்பாக அப்பண்ணா கதாபாத்திரத்தில் ராம் சரண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார் என்று பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Game Changer

கேம் சேஞ்சர் படத்திற்கு போட்டியாக பாலாவின் வணங்கான், ஷான் நிகம் நடித்த மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் இன்று ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது கேம் சேஞ்சர் தான். ஷங்கர் இயக்கிய முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் கேம் சேஞ்சர் மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறுகிறார்கள். கேம் சேஞ்சர் படத்தை சுமார் 450 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ள ஷங்கர், இப்படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் 90 கோடிகளுக்கு மேல் செலவழித்துள்ளாராம். இதனால் பாடல் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஷங்கர் கம்பேக் கொடுத்தாரா? கடுப்பேற்றினாரா? கேம் சேஞ்சர் விமர்சனம் இதோ

Tap to resize

Naanaa Hyraanaa song

கேம் சேஞ்சர் படத்தில் மிகவும் பிரபலமான பாடல்களில் 'நா நா ஹைரானா' பாடலும் ஒன்று. ஸ்ரேயா கோஷல், கார்த்திக் இருவரும் மிகவும் இனிமையாக குரலில் பாடிய அந்த மெல்லிசை பாடல் இசை ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. பாடல் கேட்கும்போதே அற்புதமாக இருந்ததால், ஷங்கர் அதை எப்படி பிரம்மாண்டமாக படமாக்கி இருப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இன்று படம் ரிலீஸ் ஆனபோது தியேட்டரின் படம் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Naanaa Hyraanaa song Removed From Game Changer

'நா நா ஹைரானா' பாடல் படத்தில் இடம்பெறவே இல்லை. சுமார் 20 கோடி செலவில் படமாக்கப்பட்ட அப்பாடல் படத்தில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் மட்டுமே 'நா நா ஹைரானா' பாடலை நீக்கியதாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் வருகிற ஜனவரி 14ந் தேதி முதல் அந்தப் பாடல் மீண்டும் படத்தில் சேர்க்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அப்பாடல் படத்தில் இடம்பெறாததால் அப்செட் ஆன ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!

Latest Videos

click me!