KGF Star Yash Acting Toxic
இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆக்க்ஷன் திரைப்படம் 'டாக்ஸிக்'. இந்த ஆண்டு வெளியாக உள்ள இந்த படத்தை வெங்கட் கே. நாராயண் தயாரித்துள்ளார். KGF படத்திற்கு பின்னர் பான் இந்தியா அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் யஷ் இந்த படத்தின் மூலமாகவும் அதிக ரசிகர்களை கவர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
Yash Toxic Salary
இந்நிலையில் டாக்ஸிக் படத்தில் நடிக்க யஷ் ₹50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃப் 2 வெளியாகி நீண்ட நாட்களானாலும் யஷின் புகழ் குறையவில்லை.
Nawazuddin Siddiqui
யஷுக்கு அடுத்தபடியாக நவாசுதீன் சித்திக் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் தனது கதாபாத்திரத்திற்காக ₹3 கோடி சம்பளம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் மறைவு
Samyuktha Menon
சம்யுக்தா மேனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ₹1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷைன் டாம் சாக்கோ, டாலி தனஞ்சய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அவர்களுக்கு முறையே ₹40 லட்சம், ₹35 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் விரைவில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.