
இதுவரை சுமார் 16,000 மேற்பட்ட பாடல்களை, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடியுள்ளவர் பி.ஜெயச்சந்திரன். தமிழில் மட்டும் சுமார் 1000-திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள இவரின் பாடல்களுக்கு தற்போது வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மண்ணை விட்டு மறைந்தாலும், மனதை விட்டு நீங்காத பாடல்களை பாடியுள்ள இவர் ஜெயச்சந்திரன் யார் தெரியுமா?
ஜெயச்சந்திரன் என இவரது பெயரை கேட்டதுமே, பலர் இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என நினைக்கலாம். ஆனால் அவர் ஒரு மலையாளி. 1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி கேரளாவில் பலியத்து ஜெயச்சந்திர குட்டன் என்கிற பெயரோடு பிறந்தார். திரைத்துறைக்கு வந்த பின்னரே இவருடைய பெயர் ஜெயச்சந்திரன் என மாறியது. 1958-ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தில் நடந்த, இளைஞர் திருவிழாவில் கலந்து கொண்டு மிருதங்கம் வாசித்த இவர், 14 வயதிலேயே சிறந்த மிருதங்க கலைஞருக்கான விருதை பெற்றார்.
இதுவே இவருக்கு பாடல்கள் மீது ஆர்வம் வர காரணமாக மாறியது. பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் காட்டிய ஜெயச்சந்திரன், தன்னுடைய 23வது வயதில் 'உத்யோகஸ்தா' என்கிற மலையாள படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்றார். இவர் பாடிய முதல் மலையாள பாடலே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவருடைய குரல் மிகவும் பிரபலமானது.
இதை தொடர்ந்து, 1973-ஆம் ஆண்டு 'மணிப்பயல்' என்கிற திரைப்படத்தின் மூலம், தமிழில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தில் இவர் பாடிய 'தங்க சிமிழ் போல்' என்கிற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மலையாளம் இவருடைய தாய் மொழி என்றாலும், தமிழில் இவருடைய உச்சரிப்பு மிகவும் தெளிவாக இருந்தது. எனவே இவரை தன்னுடைய இசையில் பாட வைக்க இளையராஜா முதல்கொண்டு பல இசையமைப்பாளர்கள் ஆர்வம் காட்டினார்.
குறிப்பாக 'மூன்று முடிச்சு' படத்தில் இடம்பெற்ற வசந்த கால நதிகளிலே, 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் இடம்பெற்ற மாஞ்சோலை கிளிதானோ.., 'கடல் மீன்கள்' படத்தில் இவர் பாடிய தாலாட்டுதே வானம்... போன்ற பாடல்கள் அடுதடுத்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. மேலும் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே, மயங்கினேன் சொல்ல தயங்கினேன், கடவுள் வாழும் கோவிலில், வசந்த காலங்கல், மவுனமான மயக்கம், சின்னபூவே மெல்லபேசு, கண்ணத்தில் முத்தமிட்டல், போன்ற பல பாடல்களை பாடினார். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் SPB பாடியதாகவே தற்போது வரை பல ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் இந்த பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் ஜெயச்சந்திரன்.
1970, 80, 90 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுமார் 3 தலைமுறை நடிகர்களுக்கு பாடியுள்ள பி ஜெயச்சந்தித்ரன் கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான வன்முறை திரைப்படத்தில்' சின்ன பூவே' என்கிற பாடலை பாடினார். அஜித், விஜய், போன்ற முன்னணி நடிகர்களுக்கும் பாடி உள்ளார். 80-பது வயதை எட்டினாலும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்த இவர், இன்று மாலை 7 மணி அளவில், பூங்குன்னத்தில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தினர், உடனடியாகஇவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அஜித்தின் ரேஸ் கார் பலத்த சேதமடைந்தும் ஒரு காயம் கூட இல்லாமல் அவர் தப்பியது எப்படி?
ஜெயச்சந்திரன் ஒரு தேசிய விருது உட்பட, 5 கேரள மாநிலத்தின், விருது தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.