Published : Jan 09, 2025, 07:07 PM ISTUpdated : Jan 09, 2025, 07:20 PM IST
நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்தில் சிக்கயபோதும், அஜித்துக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லை. அவர் மிகவும் சேப்டிராக வெளியே வந்தது எப்படி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
நடிகர் அஜித்தின் ரேஸ் கார், விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்.. அஜித் எந்த ஒரு காயங்களும் இன்றி, காரில் இருந்து வெளியே நடந்து வரும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. இப்படி அஜித் எந்த ஒரு காயமும் இன்றி எப்படி பாதுகாப்பாக வெளியேறினார் என்பதை பலர் ஆச்சர்யத்துடன் பார்த்திருப்பார்கள். அது எப்படி சாத்தியம்? என்பதை தெரிந்து கொள்வோம்.
25
Ajith Race Care Accident
ஜனவரி 9-ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை போர்ஷி 992 ஜிடி 3 பிரிவிலான கார் ரேஸ், துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் அணியும் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே அஜித்துக்கு இது போன்ற கார் ரேஸ்களில் பங்கேற்ற அனுபவம் இருந்தாலும், பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் உரிய பயிற்சி பெற்று கார் ரேஸில் அஜித் பங்கேற்க தயாராகி உள்ளார்.
இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்ற போது, அஜித்தின் கார் பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில்... முன் பாகம் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்கு ஏற்பட்ட சேதாரத்தை பார்த்து. அஜித்துக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் துடித்துப் போன நிலையில்... அஜித் எந்த ஒரு காயமும் இன்றி வெளியே நடந்து வரும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது.
45
HANS Using in Race Cars
இது எப்படி சாத்தியம்? என்பது பலரது மனதில் ஒரு கேள்வி இருந்திருக்கும். இதற்கான பதிலை தெரிந்து கொள்வோம். அதாவது பொதுவாகவே ரேஸ் கார்களில், ஹேண்ட்ஸ் சிஸ்டம் (HANS) என்று ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதன் விளக்கம் (Head and neck safety system). இது ஒரு ரிங் போல இருக்கும். இது சீட் பெல்டிலேயே ஆறு முதல் ஏழு பாயிண்ட் ஹார்னசுடன் இருக்கும். இந்த ஹார்னசுடன் சேர்ந்து, ஆக்சிடென்ட் ஏதாவது நேர்ந்தால், உடலும் தலையும் அதிகம் ஷேக் ஆகாது. இதனால் தலையில் அடிபடுவது மற்றும் கழுத்து எலும்பு சேதமடைவதை தடுக்கிறது.
மேலும் ஹெல்மெட்டும், Kevlar-ல் செய்திருப்பார்கள். இந்த ஹெல்மெட்டும் HANS சிஸ்டமுடன் integrate ஆகி தலையில் அடிபடுவதை தவிர்க்கும். குறிப்பாக ரேஸ் கார்களில் வெளியே வருவதற்கு ஈஸி எஜெக்ஷன் என்கிற ஒரு செப்ட்டி செட்டிங் உள்ளது. ஃபயர் கண்ட்ரோலும் இதில் இடம் பெற்றிருக்கும். இதுபோன்ற பல சேப்டி காரணங்களால் ரேஸ் கார்கள் விபத்துக்கு ஆளானாலும், எந்த ஒரு சேதாரமும் இன்றி ரேஸர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.