தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் எஸ் ஜே சூர்யா. இப்போது நடிகராகவும் வருகிறார். ஆரம்பத்தில் இவர் நியூ, இசை, வியாபாரி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும், சமீப காலமாக முரட்டு வில்லனாக நடித்து, ரசிகர்களை மிரள வைக்கிறார். இவர் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
26
SJ Suryah Play Villain Role in Raayan
நடிப்பு ராச்சசன் என பெயர் எடுத்துள்ள எஸ்.ஜே.சூரியா, நடிப்பில் கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த, ராயன் திரைப்படம் வெளியானது. பாடலாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என்று தனக்கே உரிய பாணியில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா அறிமுகமானது ஒரு இயக்குனராக தான். நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கிய வாலி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்த நிலையில், ஜோதிகா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தஹார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து குஷி, நானி, நியூ, அன்பே அன்பே, இசை ஆகிய படங்களை இயக்கினார். இதில், வாலி மற்றும் குஷி ஆகிய படங்களுக்கு மட்டுமே ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தன. இயக்குநராக மட்டுமல்லாமல் நெத்தியடி, கிழக்கு சீமையிலே, ஆசை, ஆகிய படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தார். அதன் பிறகு தான் நியூ படம் மூலமாக லீடு ரோலில் அறிமுகமானார். பின்னர் திருமகன், வியாபாரி, கள்வனின் காதலி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
46
SJ Suryah Movies
ஆனால், இவர் ஹீரோவாக நடித்த, நியூ படத்தை தவிர வேறு எந்த படமும் பெரிதாக போகவில்லை. சில காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்தவருக்கு, மீண்டும் நடிக்க 'இறைவி' படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் மெர்சல், மாநாடு, டான், வாரிசு போன்ற படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். ஹீரோவாக இவருக்கு வாய்ப்பு கொடுத்தாத தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இவரை வில்லனாக நடிக்க வைக்க போட்டி போடுகின்றனர். இதற்காக கொடிகளிலும் இவர் சம்பளம் பெற்று வருகிறார்.
இப்போது கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படம் தவிர்த்து இந்தியன் 3, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, வீர தீர சூரன், சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் குஷி படம் குறித்து கூறிய சீக்ரெட் பேசும்பொருளாக மாறியுள்ளது. குஷி படத்தில் ஜோதிகாவின் பெயர் ஜெனிஃபர் (ஜெனி). ஆனால், விஜயகுமார் அவரை செல்வி என்று தான் அழைப்பார். இந்த செல்ல பெயரை ஜோதிகாவுக்கு எஸ்.ஜே.சூர்யா சூடியதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளதாம்.
66
SJ Suryah Reveal Secret
அதாவது தன்னுடைய அப்பாவும் அக்காவை அப்படி தான் கூப்பிடுவார். அதில் இன்ஸ்பியர் ஆகி தான் ஏலே செல்வி என்று, ஜோதிகாவை அழைக்க வைத்தேன் என கூறியுள்ளார். குஷி படம் வெளியாகி பல வருடங்களுக்கு பின், எஸ்.ஜே.சூர்யா இந்த தகவலை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.