தவெக தலைமையிடம் ராமநாதபுரத்தில் போட்டியிட ராஞ்சனா நாச்சியார் வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் பல அரசியல் அனுபவம் உள்ளவர்கள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள் என தலைமை கூறியுள்ளது.
பாஜகவில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளரும், நடிகையுமான ராஞ்சனா நாச்சியார். இவர் கடந்த 2023ம் ஆண்டு சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து படிக்கெட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும் கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார். அதுமட்டுமல்லாமல் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
27
தவெகவில் இணைந்த ராஞ்சனா நாச்சியார்
இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
37
முதல் முறையாக மனம் திறந்த விஜய்
இந்நிலையில் தவெக தலைவர் விஜயிடம் விவகாரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விஜய்க்கு ஆதரவாக ஒரு சிலரும், எதிராகவும் பேசி வந்தனர். ஆனால் தவெக தலைவர் விஜய் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் தவெக நடத்திய மகளிர் தின விழாவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக விஜய் மனம் திறந்து பேசினார்.
தற்போது நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்லை. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம். நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம் என்றார். இந்நிலையில் விஜயின் பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?
57
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே
உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய Gen-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா? "எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை" என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர். "நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன்; உன் மனைவியை விட்டு விலகிவிடு" என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன. ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? "பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா ? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது என கூறியிருந்தார்.
67
விஜயை விமர்சிக்க இதுதான் காரணம்
இந்நிலையில் தவெக பெண் கட்சி தலைவர் என்று பாராமல் விமர்சித்ததிற்கான காரணம் தெரியவந்ததுள்ளது. அதாவது தவெக தலைமையிடம் ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் பல அரசியல் அனுபவம் உள்ளவர்கள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் என்னுடைய ரசிகர்கள் பல ஆண்டுகளாக மக்களுக்காக நற்பணி செய்து கொண்டிருந்தார்கள். அந்த நபர்களில் திறமையானவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் என விஜய் மற்றும் தலைமை கூறியுள்ளது. மேலும் தவெகவில் இதுவரை எந்த பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. தவெக நடத்திய மகளிர் தின விழாவில் பேச மேடையில் பேச அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக விஜயை விமர்சித்ததாக கூறப்படுகிறது.
77
பிரபல இயக்குநரின் மகள்
விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள இந்த ரஞ்சனா நாச்சியார் துப்பறிவாளன்', 'இரும்புத்திரை, அண்ணாத்த, நட்பே துணை' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஞ்சனா நாச்சியார் பிரபல இயக்குனர் பாலாவின் உடன் பிறந்த அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.