பட்டிமன்றம் டூ பணக்காரர் - காமெடி ஜாம்பவான் மதுரை முத்துவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Published : Mar 11, 2026, 01:21 PM IST

Madurai Muthu Net Worth: நகைச்சுவையில் உலகம் முழுவதும் கலக்கி வரும் மதுரை முத்துவின் சொத்து விவரங்கள் மற்றும் அவரது வருமானம் குறித்து பார்க்கலாம்.

PREV
14
மதுரை முத்து:

மதுரை முத்து தமிழகத்தின் மிகவும் பிரபலமான நகைச்சுவை கலைஞர்களில் ஒருவர். தனது நையாண்டிப் பேச்சாலும், நகைச்சுவை பட்டிமன்றங்களாலும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். மதுரை முத்து: முத்து என்பது பெற்றோர்களால் வைக்கப்பட்ட பெயர். சினிமா துறையில் ஒரு தனி அடையாளம் வேண்டும் என்பதற்காக தன் சொந்த ஊரான மதுரையை தன் பெயரோடு இணைத்து மதுரை முத்து என்று பெயர் வந்தது. இவர் ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் இவர் வாழ்ந்தது மதுரையில் தான். 

அங்கு பள்ளி படுப்பை மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனக்கென தன் தன்னுடைய அடையாளத்தை தேடி அலைந்து கொண்டிருந்த நம் வேளையில் ஒரு மேடைப் பேச்சாளராக உயர்ந்தார் அதன் பிறகு பட்டிமன்றங்கள் அவருக்கு வாய்ப்புகளை அளித்தது. அங்கும் தனது நகைச்சுவை திறமையை வாரி தெளித்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு தனக்கென ஒரு தனி அடையாளத்தை மதுரை முத்துக்கு கொடுத்தது. அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு உயர்ந்தார் மதுரை முத்து.தமிழ்நாட்டில் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையை முதன்முதலில் கொண்டு வந்தவர் மதுரை முத்து தான். சுமார் 80 நாடுகளில் 1200+ மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

24
Madurai Muthu Net Worth

சொத்து மதிப்பு: மதுரை முத்துவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ₹2.5 கோடி முதல் ₹5 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அசையா சொத்துக்கள் & சமூகப் பணி மதுரையிலும் சென்னையிலும் சொந்தமாக வீடுகள் வைத்துள்ளார். மதுரை முத்துவுக்கு மட்டும் தனி வீடுகளும் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இரண்டு கார் வைத்திருக்கிறார்.

கோவில் மற்றும் அறக்கட்டளை: சமீபத்தில் தனது சொந்த ஊரில் மறைந்த தனது முதல் மனைவி வையமாலுக்கு மற்றும் பெற்றோருக்காக ஒரு கோவில் கட்டியுள்ளார். மேலும், அங்கு ஆதரவற்றோர் இல்லம் ஒன்றையும் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகமும் வழங்கி வருகிறார்.

34
பட்டிமன்றம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள்:

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெறும் பட்டிமன்றங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அவருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது.

YouTube சேனல்: 'Madurai Muthu Alaparai' என்ற YouTube சேனல் வைத்திருக்கிறார் மதுரை முத்து. இந்த youtube சேனலின் மூலம் மாதந்தோறும் சுமார் $350 - $1,000 வரை அதாவது இந்திய பணத்தில் ஒரு லட்சம் வரை பெறுவதாக கணிக்கப்படுகிறது.

44
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:

விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு', 'குக் வித் கோமாளி' போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் கொக்கு வித் கோமாளியில் ஒரு எபிசோடுக்கு 40 ஆயிரம் ரூபாய் இவருக்கு ஊதியமாக கொடுக்கப்படுகிறது. அதிக சம்பளம் வாங்கினவர்களில் ஒருவராக மதுரை முத்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கலக்கப்போவது யாரு இன்னும் நிகழ்ச்சியில் மதுரை முத்து ஒரு நடுவராகவும் அமர்ந்திருப்பார் அதற்கும் ஒரு எபிசோடுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories