Khushbu Weight Loss: 'யானை மாதிரி இருந்தேன்'... 98 கிலோவில் இருந்து ஸ்லிம் ஆனது எப்படி? குஷ்பு சொன்ன சீக்ரெட்

Published : Mar 11, 2026, 01:09 PM IST

'அண்ணாத்த' படப்பிடிப்பின்போது 98 கிலோ இருந்தேன். இப்போ என் வெயிட் குறைஞ்சது பெரிய வைரல் ஆச்சு. 55 வயசுலயும் எனக்கு பிபி, சுகர் எதுவும் இல்லை, ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

PREV
14
Actress Khushbu Fitness Secret

குஷ்பு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இல்ல, பல மொழி ரசிகர்களுக்கும் பிடிச்ச ஒரு நடிகை. பல வருஷமா ஹீரோயின், அம்மா, சப்போர்ட்டிங் ரோல்கள்னு பல கேரக்டர்கள்ல நடிச்சிருக்காங்க. சமீபத்துல அவங்க உடல் எடையை குறைச்சு, மிகவும் ஸ்லிம்மான லுக்கில் சோஷியல் மீடியால போட்டோஸ் போட்டது பெரிய வைரல் ஆச்சு. இப்போ, அந்த வெயிட் லாஸ் பயணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து குஷ்பு மனம் திறந்து பேசியிருக்கிறார்.

24
55 வயசிலும் பிபி, சுகர் இல்லை

ரஜினிகாந்த் நடிச்ச 'அண்ணாத்த' பட ஷூட்டிங் சமயத்துல தான் 98 கிலோ எடை இருந்ததாக கூறிய குஷ்பு, இப்போ 55 வயசானாலும் தனக்கு பிபி, சுகர் எதுவும் இல்லைன்னும், ஆரோக்கியமா இருக்கிறதுதான் முக்கியம் என்றும் கூறி இருக்கீறார். மைதா, சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிடுவதில்லை என்றும் குஷ்பு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பு இவ்வாறு பேசி இருக்கிறார்.

34
98 கிலோ இருந்தேன் - குஷ்பு

அதில் அவர் கூறியதாவது : "எனக்கு இப்போ 55 வயசு ஆகுது. இந்த வயசுலயும் எனக்கு பிபி, சுகர் எதுவும் இல்லை. இது ரெண்டும் வரவே கூடாது. எங்க அம்மாவுக்கு ஹை பிபி இருந்துச்சு. ஆனா, மைக்ரேன், சைனஸ் பிரச்சனைகளை மட்டும் அம்மா எனக்கு கொடுத்துட்டாங்க. ஆனா அந்த நோயை (பிபி) கொடுக்கல. ஓரளவுக்கு நான் இப்போ ஆரோக்கியமா இருக்கேன். 'அண்ணாத்த' படம் பண்ணும்போது நான் 98 கிலோ இருந்தேன். எங்க வீடு ரொம்ப பெருசு. மாடிப்படி ஏறி இறங்கும்போது முட்டி வலி, மூச்சு வாங்கறதுன்னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

44
குஷ்பு கொடுக்கும் டிப்ஸ்

என் முகத்தை கண்ணாடியில பார்த்தா எனக்கே பயமா இருக்கும். யானை மாதிரி ரவுண்டா இருந்துச்சு. கடைசியில, பிபி வராம இருக்கணும், முட்டி வலி போகணும்னா வெயிட்டைக் குறைச்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க. கோவிட் நேரத்துலதான் வெயிட் குறைக்க ஆரம்பிச்சேன். நாலு வருஷம் ஆச்சு இந்த வெயிட்ட குறைக்க. மைதா, சப்பாத்தி எதுவும் சாப்பிடறது இல்ல. ஆரோக்கியமா இருக்கிறதுதான் முக்கியம். நான் சினிமாவுக்கு வந்தப்போ ரொம்ப ஒல்லியா இருந்தேன். அப்பவும் ரசிகர்கள் என்னை ஏத்துக்கிட்டாங்க. குண்டான பின்பும் அவங்க என்னை ஏத்துக்கிட்டாங்க," என்று குஷ்பு அந்த பேட்டியில் கூறினார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories