புது லுக்கிற்கு மாறிய ரஜினி.. தலைவர் 170 படத்தில் நானி முதல் பகத் பாசில் வரை இத்தனை பிரபலங்கள் நடிக்கிறார்களா?

Published : Aug 04, 2023, 01:12 PM IST

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 படத்தில் பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் கமிட் ஆகி உள்ளார்களாம்.

PREV
14
புது லுக்கிற்கு மாறிய ரஜினி.. தலைவர் 170 படத்தில் நானி முதல் பகத் பாசில் வரை இத்தனை பிரபலங்கள் நடிக்கிறார்களா?

ராதாமோகன் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பயணம் படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியது மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் த.செ.ஞானவேல். இதையடுத்து பிரகாஷ் ராஜ் இயக்கிய தோனி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ஞானவேல், கடந்த 2017--ம் ஆண்டு அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த கூட்டத்தில் ஒருவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

24

பின்னர் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்த ஞானவேல், ஜெய் பீம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இதில் மணிகண்டன், லிஜோ மோல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடியினருக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன இப்படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மாபெரும் வெற்றியையும் ருசித்தது.

இதையும் படியுங்கள்... ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டினாரா ரஜினி?- முதல் ஆளாக ஜெயிலர் படம் பார்த்து விமர்சனம் சொன்ன அனிருத்

34

ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் த.செ.ஞானவேலுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ரஜினியின் தலைவர் 170 திரைப்படம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. மேலும் இது ஜெய் பீம் பாணியில் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதாகவும் இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக புது லுக்கிற்கு மாறி இருக்கிறார் ரஜினி.

44
thalaivar 170

இந்நிலையில், தலைவர் 170 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் லிஸ்ட் கசிந்துள்ளது. ஏற்கனவே அமிதாப் பச்சன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் இணைந்துள்ளனர். அதன் படி தெலுங்கு நடிகர் நானி, மலையாள நடிகர் பகத் பாசில், மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரும் தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இதன்மூலம் இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... கருணை காட்டாத ரஜினி... தனி ஒருவனாக ஜெயிலர் இயக்குனர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories