இதையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மலையாள ஜெயிலர் பட இயக்குனர் சக்கீர் மடதில், தான் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் நகையை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும் கடன் வாங்கி தான் இந்த படத்தை எடுத்துள்ளதாகவும், இப்படத்தின் வெற்றியை நம்பி தான் என் எதிர்காலமே உள்ளது. ரஜினி நல்ல மனம் கொண்டவர். அவர் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்து இருந்தார்.