தமன்னா எங்கடா?.... ஜெயிலர் ஷோகேஸ் டிரைலரில் நெல்சன் கட் பண்ணிய கேரக்டர்கள் இத்தனையா!

First Published | Aug 4, 2023, 10:10 AM IST

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலரில் தமன்னா உள்பட சில கேரக்டரை காட்டாமல் நெல்சன் கட் பண்ணி உள்ளதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மையில் ஜெயிலர் படத்தின் டிரைலரை ஷோகேஸ் என்கிற பெயரில் ரிலீஸ் செய்திருந்தனர்.

ரஜினியின் மாஸ் மொமண்ட்ஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பி இருந்த இந்த டிரைலர் செம்ம வைரல் ஆனாலும், இதில் பீஸ்ட், விக்ரம், பாட்ஷா போன்ற படங்களோடு ஒப்பிடும் வகையில் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்த டிரைலரை பார்த்து ரசிகர்கள் அதிகளவில் எழுப்பிய கேள்வி தமன்னா எங்கே என்பது தான். இந்த டிரைலரில் ஒரு சீனில் கூட தமன்னாவை காட்டவில்லை.

இதையும் படியுங்கள்... ரசிகர்கள் படைசூழ... மனைவியுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த அருண்விஜய் - வைரலாகும் வீடியோ


இதனால் சந்தேகம் அடைந்த நெட்டிசன்கள் ஒரு வேளை தமன்னா காவாலா பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடிவிட்டு செல்வாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெயிலர் டிரைலரில் தமன்னா மட்டும் மிஸ் ஆகவில்லை, மோகன்லால், ஷிவ ராஜ்குமார் ஆகியோரின் கேரக்டரையும் காட்டாமல் ஒளித்து வைத்துள்ளார் நெல்சன். இதற்கான காரணம் என்ன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலரோ, தமன்னா, மோகன்லால் மற்றும் ஷிவ ராஜ்குமார் ஆகியோரின் கேரக்டர்களை நெல்சன் சர்ப்ரைஸ் ஆக வைத்திருக்கிறார் என்று கூறுகின்றனர். அப்படி சர்ப்ரைஸ் ஆக இருந்தால், அது விக்ரம் படத்தில் வரும் ரோலெக்ஸ் சூர்யா ரேஞ்சுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜெயிலர் படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் மட்டும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... திடீரென மணிரத்னம் வீட்டுக்கு படையெடுத்து வந்த பிரம்மாண்ட இயக்குனர்கள்... என்ன விசேஷம் தெரியுமா?

Latest Videos

click me!