சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், அடுத்ததாக வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படம் இதனை பூர்த்தி செய்யும் என நம்புகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏற்ற போல் நேற்று வெளியான ஜெயிலர் படத்தின் டிரைலர் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மோகன் லால்:
மலையாளத்தில் ஒரு படத்திற்கு 18 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் மோகன் லால், 'ஜெயிலர்' படத்தில் நடிக்க சுமார் 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரம்யா கிருஷ்ணன்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்திற்கு பின்னர் தான் நடிக்கும் படங்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த இவர், ஜெயிலர் படத்திற்காக 80 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிவராஜ் குமார்:
கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், கன்னடத்தில் தான் நடிக்கும் படங்களுக்கு 10 கோடி முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார். ஆனால் ஜெயிலர் படத்தில் நடித்த 4 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டாராம்.
யோகிபாபு:
படு பிஸியான காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் இவர், 'ஜெயிலர் படத்தில் நடிக்க 1 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.