பாலாவின் மனைவி மலர், ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களுக்கே தெரியாமல் எப்படியோ ரவீந்தர்நாத்துக்கும் - மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது. ஒரு நிலையில் மலர் பணத்துக்காக அபாஷன் செய்வது போல், மருத்துவமனையில் இருந்து கொண்டு நடித்தது மட்டும் இன்றி, என்னையும் அவருக்கு ஆதரவாக, ரவீந்தர்நாத்திடம் பேச சொன்னார். அவர் நடிப்பதை அறிந்ததும் எனக்கு அவர் மேல் இருந்த, மரியாதை போய் விட்டது. இனி உன்னுடைய நட்பே வேண்டாம் என மலரிடம் இருந்து விலகி விட்டேன். இதுபற்றி ரவீந்தரநாத்திடமும்... அண்ணா மலர் உங்களை ஏமாற்றுவதற்காக நடிக்கிறார் என கூறினேன்... அதற்க்கு பிறகு தான் எனக்கு பிரச்சனை வர துவங்கியது என காயத்ரி தேவி கூறியுள்ளார்.