மலையாள திரையுலகை கலக்கிய இயக்குனர்.. சியான் 62வை இயக்கப்போவது அவர் தானா? - சட்டுனு ஒரு முடிவு எடுங்க!

Ansgar R |  
Published : Aug 03, 2023, 08:13 PM IST

கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற சூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் களமிறங்கியவர் தான் பிரபல இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

PREV
13
மலையாள திரையுலகை கலக்கிய இயக்குனர்.. சியான் 62வை இயக்கப்போவது அவர் தானா? - சட்டுனு ஒரு முடிவு எடுங்க!

ஆனால் பிரேமம் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஓம் சாந்தி ஓசானா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 5ம் தேதி இவருடைய இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படம் தான் 2018. இதுவரை மலையாள திரை உலகில் அதிக வசூலை கண்ட வெகு சில படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று என்று கூறப்படுகிறது. 

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !

23

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், உலக அளவில் இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.

33

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜோசப் அவர்கள் தற்பொழுது அடுத்தபடியாக பிரபல தமிழ் நடிகர் சியான் விக்ரம் அவர்களை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சியான் நடிப்பில் ஏற்கனவே தங்கலான் திரைப்படம் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில், அவருடைய 62 ஆவது திரைப்படமாக இந்த திரைப்படம் அமைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மணிப்பூர் கலவரத்தை கையில் எடுத்து பாஜகவுக்கு பயம் காட்ட போகிறாரா கமல்! ஆர்ப்பாட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories