Bigg Boss Tamil Season 8 : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்தும், அந்நிகழ்ச்சியின் துவக்க தேதி குறித்தும் அப்டேட் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக 7 சீசன்கள் முடிவடைந்து உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தொகுத்து வழங்கப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டு விலகினார் கமல்ஹாசன்.
24
vijay sethupathi
சினிமாவில் பிசியாக உள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என கமல் அறிவித்தார். கமலுக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், விஜய் சேதுபதி அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட்டாகி உள்ளதாக கடந்த வாரம் விஜய் டிவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அவரை வைத்து புரோமோ ஷூட்டையும் நடத்தி முடித்துள்ளனர். அதில் கோட் சூட்டில் டிப் டாப்பாக காட்சியளிக்கிறார் மக்கள் செல்வன்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே புதுமைகள் நிறைந்திருக்கும். அந்த வகையில் கடந்த சீசனை போல் இந்த சீசனிலும் இரண்டு வீடு கான்செப்ட் தொடர உள்ளது. அதுதவிர பல்வேறு ஆச்சர்யங்களும் இந்த சீசனில் காத்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ள பிரத்யேக புரோமோ வீடியோ இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
44
Bigg Boss Host Vijaysethupathi
அந்த புரோமோவே மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதில் முதலில் விஜய் சேதுபதி எப்படி இந்த சீசனை கையாளப்போகிறார் என்று மக்களிடம் கருத்து கேட்டதோடு, அதை விஜய் சேதுபதியிடமே போட்டுக்காட்டி அதற்கு அவர் விளக்கம் கொடுக்கும் படி இந்த புரோமோ காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறதாம்.
கடந்த சீசனைப் போல் இல்லாமல் பிரச்சனைகளை சரியாக கையாள வேண்டும் என்றும் விஜய் சேதுபதிக்கு மக்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி இந்த சீசனில் புதிய ட்விஸ்ட் ஆக முந்தைய சீசன் போட்டியாளர்களையும் களமிறக்க உள்ளார்களாம். 2 முதல் 3 முந்தைய சீசன் போட்டியாளர்கள் இந்த சீசனில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடன் தான் புதுப்போட்டியாளர்கள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.