தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு திருப்புமுனையாக அமைந்த "பீட்சா" திரைப்படத்தில் அவருடைய நாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ரம்யா நம்பீசன், தொடர்ச்சியாக தமிழில் "சேதுபதி", "சைத்தான்", "சத்தியா", "சீதக்காதி" மற்றும் "நட்புன்னா என்னன்னு தெரியுமா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். நடிகையாக மட்டுமல்லாமல் ரம்யா நம்பீசன் ஒரு மிகச்சிறந்த பாடகையாகவும் திகழ்ந்து வருகிறார்.