கோட்.. கேமியோவில் கலக்கிய த்ரிஷா - ஒரே ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Sep 8, 2024, 9:34 PM IST

Actress Trisha Matta Song Salary : தளபதி விஜயின் கோட் திரைப்படத்தில், பிரபல நடிகை த்ரிஷா, மட்ட என்கின்ற பாடலில் பேமியோவில் தோன்றி அசத்தினார்.

Jodi Movie

தமிழ் திரையுலகில் துணை நடிகையாக அறிமுகமாகி, அதன் பிறகு சிறப்பான பல கதாபாத்திரங்களில் நடித்து இன்று கோலிவுட் உலகின் குயின் என்ற அந்தஸ்தில் இருக்கும் நடிகை தான் திரிஷா. தமிழ் திரையுலகை பொருத்தவரை உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள வெகு சில நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். கடந்த 2004ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "கில்லி" திரைப்படத்தில் நான் முதல் முறையாக அவருடன் நாயகியாக நடித்து அசத்தினார்.

ஒரே வரியை 4 பாடல்களில் பயன்படுத்திய வாலி! நாளுமே சூப்பர் ஹிட்!

Ghilli Movie

கில்லி திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் ஆன நிலையில், அந்த ஜோடி தமிழ் சினிமாவின் சிறந்த ஆன் ஸ்கிரீன் ஜோடியாக மாறியது. அதைத் தொடர்ந்து "திருப்பாச்சி", "குருவி" மற்றும் "ஆதி" உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ச்சியாக இணைந்து நடித்து வந்த திரிஷாவும் விஜயும், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்த திரைப்படம் தான் லோகேஷ் கனகராஜன் லியோ. கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் மெகா ஹிட் ஆன இந்த திரைப்படத்தில், திரிஷாவின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. லோகேஷின் சினிமாட்டிக் யூனிவெர்ச்சுக்குள் மீண்டும் த்ரிஷா இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.


Leo Movie

இந்த சூழலில் தான் தளபதி விஜய் தனது சினிமா பயணத்தின் இறுதி அத்தியாயத்தில் பயணித்து வரும் நிலையில், அண்மையில் அவருடைய நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் "கோட்" என்கின்ற திரைப்படம் உலக அளவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அந்த திரைப்படத்தில் பல சிறப்பான கேமியோகள் அமைந்த நிலையில், "மட்ட" என்கின்ற பாடலில் நடிகை திரிஷா விஜய்யோடு இணைந்து நடனமாடியது, குறிப்பாக கில்லி பட பாடலை ரீமேக் செய்து என்பது, பலருடைய கவனத்தை ஈர்த்தது. ஒருவேளை தளபதி விஜயின் 69வது திரைப்படத்தில் திரிஷா நடிக்கவில்லை என்றால், இதுவே விஜயும் திரிஷாவும் இணைந்து நடித்த கடைசி திரைப்படமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Trisha Matta Song

இந்நிலையில் கோட் திரைப்படத்தில் ஒலித்த "மட்ட" பாடலுக்கு நடிகை திரிஷா பெற்ற சம்பளம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், கிடைக்கப்பெற்றிருக்கும் தரவுகளின்படி இந்த பாடலில் நடனமாட நடிகை திரிஷா, சுமார் 1.2 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகை சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "புஷ்பா" படத்தில் ஒலித்த "ஊ சொல்றியா மாமா" பாடலில் நடனமாட சுமார் 3 கோடி ரூபாய் சம்பளமாக பெறப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆகவே அதை ஒப்பிடும்பொழுது நடிகை திரிஷா குறைந்த அளவிலான சம்பளத்தையே பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

மீ டூ முதல்.. போதை பஞ்சாயத்து வரை - நடிகர் விநாயகன் கிளப்பிய டாப் 4 சர்ச்சைகள்!

Latest Videos

click me!