
தமிழ் சினிமாவில் கடந்த 2006வது ஆண்டு முதல் பிரபலமான நடிகராக பயணித்து வந்தாலும், கடந்த 29 ஆண்டுகளாக திரை துறையில் பயணித்து வரும் மூத்த நடிகர் தான் விநாயகன். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, தனது தனித்துவமான நடிப்பால் இன்று முன்னணி வில்லன் நடிகராக அவர் மாறி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. தமிழை பொறுத்தவரை அவர் பெரிய அளவில் வில்லின் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
ஆனால் மலையாள மொழியில் குணச்சித்திர வேடங்களிலும், பல திரைப்படங்களில் தோன்றி அசத்தியிருக்கிறார். தனக்கே உரித்தான உடல் மொழி, டயலாக் டெலிவரி உள்ளிட்ட பல பிளஸ் பாயிண்டுகள் விநாயகனிடம் இருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாகவே சிக்கல்களில் சிக்கி, பெரிய "சர்ச்சை நாயகனாகவும்" அவர் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கூட அக்டோபர் மாதம் அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் போலீசார் அவரை விசாரிக்க நேரிட்டது. அப்போது அவரை கைது செய்ய வந்த போலீசாரிடமே அவர் எல்லை மீறி நடந்ததாகவும், அவர்களோடு தகராறு செய்ததாகவும் கூறப்பட்டது. பின் அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டு, அவர் மது போதையில் இருந்தாரா என்பது குறித்த பரிசோதனைக்கு உள்ளனர். பிறகு பெயிலில் அவர் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
டாப் நடிகரின் படத்தில் ஆசையாக நடித்து மோசம் போன நக்மா! கவர்ச்சி நடிகையால் ஃபீல்ட் அவுட் ஆன சோகம்!
இதேபோல கடந்த ஜூலை 20, 2023 அன்று, நடிகர் விநாயகன், சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு வீடியோ காரணமாக அப்போது எர்ணாகுளம் டவுன் வடக்கு போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல அப்போது அவர் பெரிய அளவில் சட்டச் சிக்கலில் சிக்கினார் என்பதும் பலர் அறிந்ததே. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்தின் போது வெளியிடப்பட்ட வீடியோவால் அப்போது அவர் சிக்கலில் மாட்டினார்.
அந்த வீடியோவில், மறைந்த முன்னாள் முதல்வர் குறித்த சில கேள்விகள் பொதுவாக கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விநாயகன், “உம்மன் சாண்டி யார்?” என்று ஊடகங்களிடமே பதிலுக்கு கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மறைந்த, அதுவும் கேரளாவின் முதலைவராகவும், அமைச்சராகவும் இருந்த ஒருவரை பொதுவெளியில் யார் அவர் என்று கேட்டது பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. ஆனால் அந்த பிரச்சனை சர்ச்சையான பிறகு, அதற்கு தான் கேட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறி, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார் விநாயகன்.
அதே போல சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நவ்யா நாயர் நாயகியாக நடித்த 'ஒருத்தி' என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விநாயகன், #MeToo இயக்கம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், அந்த MeToo இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதல் தனக்கு இல்லை என்பது குறித்து பேசினார்.
பாலியல் செயல்பாடுகளுக்கு ஒரு பெண்ணின் சம்மதத்தைக் கேட்பது தான் இந்த MeTooவா என்பது போன்ற அவருடைய கேள்விகள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் தனக்கு உடல் ரீதியான தொடர்பு இருப்பதாகவும் அப்போது விநாயகன் குறித்து சர்ச்சையின் உச்சத்தையே கண்டது.
மேலும் இந்த நிகழ்வின் போது, விநாயகன் ஒரு பெண் பத்திரிக்கையாளரை நோக்கி தகாத கருத்தை தெரிவித்தது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அவரது பேச்சின் தீவிரத்தையும் அவை உருவாக்கிய பிரச்சனைகளையும் உணர்ந்து, விநாயகன் பின்னர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பும் கேட்டார்.
இந்த சூழலில் தான் நேற்று செப்டம்பர் 7ம் தேதி தன்னுடைய திரைப்பட படப்பிடிப்பு சம்பந்தமாக கொச்சியிலிருந்து கோவா புறப்பட்டு செல்லவிருந்தார் விநாயகன். அவர் கோவா செல்வதற்கு முன்பாக தனது கனெக்டிங் பிளைட்டில் பயணம் செய்ய ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். அங்கு தன்னுடைய விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த பொழுது விமான நிலையத்தில் பணியில் இருந்த CISF படையினரிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மதுபோதையில் இருந்த அவரை சோதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியபோது, அவர்களிடம் அத்து மீறியதால் அவரை தனிமைப்படுத்தி விசாரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் நடிகர் விநாயகன் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், தன்னை வேண்டுமென்றே தனி அறையில் வைத்து போலீசார் விசாரணை செய்ததாக கூறப்பட்டிருக்கிறது.
இறுதியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல மெல்ல மீண்டும் தனது புகழை உறுதிப்படுத்தி வரும் நடிகர் விநாயகன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கடனா இல்ல, நன்கொடையா வச்சுக்கோங்க.. நடிகர் சங்க கட்டிடம் - அள்ளிக்கொடுத்த "த.வெ.க" தலைவர் விஜய்!