ஒரே வரியை 4 பாடல்களில் பயன்படுத்திய வாலி! நாளுமே சூப்பர் ஹிட்!

First Published | Sep 8, 2024, 3:34 PM IST

Vaali used same lyrics for 4 Tamil songs : கவிஞர் வாலி ஒரே பாடல் வரியை 4 வெவ்வேறு தமிழ் பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார். அது என்னென்ன பாடல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vaali used same lyrics for 4 Tamil songs

காலத்தால் அழியாத பல மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்தவர் வாலிப கவிஞர் வாலி. இவர் மறைந்துவிட்டாலும் இவரின் பாடல் வரிகள் இன்றளவும் பலரை முனுமுனுக்க செய்து வருகிறது. அப்படி காலம் கடந்த மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது வாரியின் வைர வரிகள். சில பாடல்வரிகள் தங்களுக்கு மிகவும் பிடித்துப்போனால், அதை பாடலாசிரியர்கள் வெவ்வேறு பாடல்களில் பயன்படுத்துவதுண்டு, அவ்வாறு வாலி ஒரே பாடல் வரிகளை நான்கு பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.

உன்னைப் பார்க்கலேனா ஒவ்வொரு நிமிஷமும் வருஷம் மாதிரியும், நீ கூட இருந்தா வருஷமெல்லாம் நிமிஷம் மாதிரியும் இருக்கு என்கிற உவமையுடன் கூடிய பாடல் வரிகளை தான் கவிஞர் வாலி 4 பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார்.

Sathya

1988-ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் சத்யா. இளையராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற வலையோசை கலகலகலவென பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இப்பாடலை எழுதியது கவிஞர் வாலி தான். இப்பாடலில், ‘உன்னை காணாதுருகும் நொடி நேரம்; பல மாதம் வருடம் என மாறும்’ என வரிகளை எழுதி இருப்பார் வாலி.

இதையும் படியுங்கள்... இசைப்புயலின் கெத்தான சம்பவம்! ஹாலிவுட் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தமிழ் பாட்டு பற்றி தெரியுமா?

Tap to resize

Thalapathy

அதேபோல் கடந்த 1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷோபனா நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரியான வெற்றியை ருசித்த சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலிலும் இதே உவமையுடன் கூடிய பாடல் வரி இடம்பெற்று இருக்கும். அதில், ‘மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால், வாரங்களும் மாதம் ஆகும் காலம் மாறி ஓடினால்’ என்கிற வரியை வாலி எழுதி இருப்பார். இப்பாடலுக்கு இசையமைத்ததும் இளையராஜா தான்.

Kadhal Desam

இதுதவிர 1996-ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் அப்பாஸ், வினீத், தபு நடிப்பில் வெளியான காதல் தேசம் திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல் எனை காணவில்லையே நேற்றோடு. இப்பாடலிலும் ‘நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே... வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே’ என்கிற வரிகளில் அதே உவமையை பயன்படுத்தி இருப்பார் வாலி.

Sillunu Oru Kadhal

இறுதியாக கடந்த 2006-ம் ஆண்டு ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம்பெறும் நியூயார்க் நகரம் பாடலில், ‘நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ’ என்கிற வரியில் அதே உவமையை பயன்படுத்தி இருப்பார் கவிஞர் வாலி. இப்பாடலுக்கு இசையமைத்ததும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... முதல்வன் படத்தில் வரும் புகார் பெட்டி ஞாபகமிருக்கா! அதில் ஒட்டிய ஸ்டிக்கருக்கு பின்னணியில் இப்படியொரு வரலாறா!!

Latest Videos

click me!