தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க கட்டட பணிகளை மீண்டும் தொடர அமைச்சர் உதயநிதி, தன் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயும், மேலும் 5 கோடி ரூபாய் பரிந்துரை செய்து ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இதுகுறித்து துணைத் தலைவர் கருணாஸ் பேசும் போது சங்க கட்டடத்துக்கான கடன் வாங்கும் போது தேவையான டெபாசிட் தொகையில் பெரும் தொகையை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியின் முன்னெடுப்பால்தான் நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.