காதலனுடன் சண்டையா? திடீரென திருமணத்தை தள்ளிப்போட்டது ஏன்? நடிகை தமன்னா விளக்கம்

First Published | Sep 8, 2024, 12:40 PM IST

Tamannaah Marriage Delayed : நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் பறவை போல் சுற்றித் திரியும் நடிகை தமன்னா, தற்போது திருமண விஷயத்தில் தனது காதலனுக்கு அதிர்ச்சி அளித்துள்ளாராம் 

Vijay Varma, Tamannaah

திரையுலகில் உள்ள மிகவும் அழகான கதாநாயகிகளில் தமன்னாவும் ஒருவர். 35 வயதை எட்டிய நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். ஆனால் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் வயப்பட்ட தமன்னா பல விருது விழா மேடைகளில் தன் காதலனுடன் ஜோடியாக வந்து கலந்துகொண்டுள்ளார். நீண்ட நாட்களாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் தங்கள் உறவை வெளிப்படுத்தியது. இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்து, மகிழ்ச்சியாக உறவைத் தொடர்கிறார்கள்.

Tamannaah Lover

ஆனால் திருமணத்தைப் பற்றி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்ற வதந்தி பரவியது. ஆனால் அது வெறும் வதந்திதான். 

திருமணம் குறித்து பலமுறை ஊடகங்கள் தமன்னா மற்றும் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளன.. ஆனால் இருவரும் எதற்கும் தெளிவான பதில் அளிக்கவில்லை.  தற்போது தமன்னா தனது காதலன் விஜய்க்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் குறித்த அவரது பதில் விசித்திரமாக உள்ளது என கூறப்படுகிறது. 
 

Tap to resize

Tamannaah Bhatia

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ​​தமன்னா சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். தற்போது தனக்கு திருமணம் செய்து கொள்ளும் மனநிலை இல்லை என்று கூறியுள்ளார். நேரம் வரும்போது பார்ப்போம் என்றார். திருமணத்திற்கு தயாராகி வரும் விஜய் வர்மாவுக்கு தமன்னாவின் இந்த பதில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Tamannaah Vijay Varma Marriage Delayed

கடந்த இரண்டரை ஆண்டுகளாக விஜய் வர்மா மற்றும் தமன்னா காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் திருமணம் குறித்து மட்டும் தமன்னா ஏன் தயங்குறாங்கன்னு யாருக்கும் புரியல.  அதே நேரத்தில் விஜய் வர்மா திருமணத்திற்கு தயாராக இருந்தாலும், தமன்னா மட்டும் இப்போதைக்கு வேண்டாம் என்று தள்ளிப் போடுகிறார் என்று கூறப்படுகிறது. 
 

Tamannaah Lover Vijay Varma

கெரியரைப் பொறுத்தவரை, புதிய கதாநாயகிகளின் வரவால், முன்னணி நடிகர்கள் தமன்னாவைப் புறக்கணிக்கின்றனர். இதனால் தமன்னா சீனியர் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவில் திரைப்படங்கள், வெப்தொடர்கள் மற்றும் ஐட்டம் பாடல்களையும் ஆடுகிறார்.. 

தெலுங்கில் அசோக் தேஜா இயக்கும் 'ஓடேலா 2' என்ற த்ரில்லர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம் வொர்க்ஸ் பேனரில் தயாராகி வரும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

Latest Videos

click me!