பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு; ரஜினியை ஓவர்டேக் செய்த விஜய்! வசூலில் சாதனை மேல் சாதனை படைக்கும் கோட்!

GOAT movie Box Office Record : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கோட் திரைப்படத்தின் வசூல் சாதனை குறித்து பார்க்கலாம்.

Rajini vs Vijay

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் இளம் வயது விஜய் கதாபாத்திரத்தை டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி தளபதியை இளைய தளபதியாக காட்டி இருந்தனர். கோட் படத்திற்கு விமர்சனங்கள் சற்று கலவையாக கிடைத்தாலும் விஜய் ரசிகர்களுக்கு இப்படம் செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

The Greatest of all time

கோட் படத்தில் விஜய் மட்டுமின்றி சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதோடு நடிகை த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் வந்து குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் தன் பங்கிற்கு வந்து கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதோடு, கேப்டன் விஜயகாந்தையும் ஏஐ உதவியுடன் படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.


GOAT Movie Vijay De Ageing Look

இப்படி பல சர்ப்ரைஸ்களுடன் ரிலீஸ் ஆகியுள்ள கோட் படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பேமிலி ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.126 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் அதன் வசூல் அப்படியே பாதியாக குறைந்தது. பின்னர் மூன்றாம் நாளான நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் மீண்டும் பிக் அப் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... முதல்வன் படத்தில் வரும் புகார் பெட்டி ஞாபகமிருக்கா! அதில் ஒட்டிய ஸ்டிக்கருக்கு பின்னணியில் இப்படியொரு வரலாறா!!

GOAT Movie Collection

அதன்படி கோட் திரைப்படம் மூன்று நாட்கள் முடிவில் ரூ.225 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 80 கோடிக்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும் இன்றைய நாள் முடிவில் அது 100 கோடி வசூலை எட்டவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டிலும் சக்கைப்போடு போட்டு வரும் கோட் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் சிங்கப்பூரில் மூன்று நாள் முடிவில் இப்படம் 7.75 கோடி வசூலித்துள்ளதாம். அதேபோல் மலேசியா மற்றும் இலங்கையிலும் கோட் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம்.

GOAT movie Box Office Record

கேரளாவை காட்டிலும் கர்நாடகாவில் கோட் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு முதல் நாளில் 8.33 கோடியும், இரண்டாவது நாளில் 2.62 கோடியும் வசூலித்திருந்த கோட் திரைப்படம் மூன்றாவது நாளில் 4.13 கோடி வசூலித்து மொத்தமாக இதுவரை 15.08 கோடி வசூலித்து உள்ளது.

நடிகர் விஜய்யின் கோட் படம் மூன்று நாட்களில் 200 கோடி வசூலை தாண்டியதோடு மட்டுமின்றி ஒரு மாஸ் சாதனையையும் படைத்துள்ளது. அதன்படி அதிக 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய தமிழ் நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் 8 படங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு அடுத்தபடியாக ரஜினி 6 படங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அஜித், கமல்ஹாசன் ஆகியோருக்கு இதுவரை ஒரே ஒரு 200 கோடி வசூல் படம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒத்த போஸ்டர் கூட ஒட்டாமல் சஸ்பென்ஸ் ஆக ரிலீஸ் ஆகி வசூல் சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம் பற்றி தெரியுமா?

Latest Videos

click me!